புதுடில்லி, அக். 11- பன்னாட்டளவில் கரோனா பரவல் கட்டுப்பாடுக ளுக்கிடையே பள்ளிகளில் 54 விழுக்காட்டளவில் ஆசிரியர் கள் நேரில் பாடம் நடத்துவதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கரோனா வைரஸ் பெருந் தொற்று பரவலைத் தடுப்பதற் காக கடந்த ஆண்டு பன்னாட் டளவில் 188 நாடுகளில் பள்ளி கள் மூடப்பட்டன. இதனால் 160 கோடி குழந்தைகள் பள் ளிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
இப்போது பன்னாட்டளவில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக் குள் வந்த நிலையில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. பள்ளிகளை மூடுவது என்பது கடைசி வாய்ப் பாகத்தான் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பும் கூறுகிறது. பள்ளி குழந்தைக ளிடையே கரோனா பரவலுக்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்ப தால், அதிலும் குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைக ளுக்கு கரோனா பரவுகிற வாய்ப்பு குறைவு என்பதால், தடுப்பூசிக்கு காத்திருக்காமல் பள்ளிகளை திறக்கலாம் என்று உலக வங்கி பரிந்துரைத்துள்ளது.
பள்ளிகள் திறப்பு குறித்து ஆராய்வதற்காக உலகளாவிய கல்வி மீட்பு ‘டிராக்கர்’ என்ற அமைப்பை உலக வங்கி, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், யுனிசெப் ஆகியவை கூட்டாக உருவாக்கி உள்ளன. இது, பள்ளி களை திறப்பது தொடர்பாக உலக நாடுகளுக்கு உதவும். இந்த அமைப்பு பள்ளிகள் திறப்பு தொடர்பாக ஆராய்ந்து புள்ளி விவரங்களுடன் கூடிய அறிக் கையை வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதா வது, பன்னாட்டளவில் 80 விழுக்காடு பள்ளிகள் வழக்கம் போல இயங்குகின்றன. அவற் றில் 54 விழுக்காடு பள்ளிகளில், வழக்கம்போல ஆசிரியர்கள் நேரடியாக வந்து வகுப்புகளை நடத்துகின்றனர். 34 விழுக்காடு பள்ளிகள் உயர் தொழில்நுட்ப முறையில் வகுப்புகளை நடத்து கின்றன. 10 விழுக்காடு பள்ளிக் கூடங்கள் தொலைவிட கல்வி யாக நடத்துகின்றன. 2 விழுக் காடு பள்ளிக்கூடங்கள் எந்த முறையிலும் வகுப்புகளை நடத்தவில்லை.
53 விழுக்காடு நாடுகளில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை செலுத்தப்படுகிறது. ஆனாலும் பள்ளி ஆசிரியர்களும், இதர பணியாளர்களும் முழுமையாக தடுப்பூசி போடுகிற வரை காத் திருக்காமல் பள்ளிகளை திறக் கலாம் என்பதுதான் உலக வங்கி யின் பரிந்துரையாக உள்ளது. போதுமான பாதுகாப்பு அம்சங் களுடன் பள்ளிகளை திறந்து விடலாம் என்றுதான் உலக வங்கி கூறுகிறது.
பள்ளிகளை திறப்பதற்கு முன்பாக 1 லட்சம் பேருக்கு 36 முதல் 44 பேரை கரோனா பாதித்து மருத்துவமனைகளில் சேர்த்துள்ள நாடுகளில்கூட, பள்ளிகள் திறப்பால் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கவில்லை.
பள்ளிகள் திறப்பதற்கு முன் பாக அதிக எண்ணிக்கையிலான வர்கள் கரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் சேர்க்கப் படுகிற நிலையில் இருந்த நாடு களில் பள்ளிகள் திறந்த பின்னர் கரோனா பாதிப்பு அதிகரித்துள் ளதா என்பது பற்றிய ஆய்வு முடிவு வரவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment