சிறுமி பாலியல் வன்முறை, கொலை முயற்சி குற்றம் நடந்த 9 நாள்களில் தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

சிறுமி பாலியல் வன்முறை, கொலை முயற்சி குற்றம் நடந்த 9 நாள்களில் தீர்ப்பு

இளைஞருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை-ரூ.2 லட்சம் அபராதம் 

ஜெய்ப்பூர்,அக்.9 ராஜஸ்தானில் சிறுமி பாலியல் வன்முறை, கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து போக் சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள் ளது. இவ்வழக்கில் குற்றம் நிகழ்த்தப் பட்ட 9 நாள்களில்  விரைவான விசாரணை, தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து  காவல்துறையினருக் கும் நீதித் துறைக்கும் முதலமைச்சர் அசோக் கெலாட் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டம் கோத்தவடா கிராமத் தை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி மாலையில் தெருவில் விளையாடி கொண்டி ருந்தார். அந்த சிறுமியை, கமலேஷ் (25) என்பவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்யவும் முயன்றார்.

அவரிடமிருந்து தப்பிய சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார்.

அன்றிரவு சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித் தனர்.

போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள், வழக்கை விசாரிக்க 150 காவலரை நியமித்தனர்.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி மதியம் கமலேஷ் கைது செய்யப் பட்டார். அன்றைய தினமே டிஎன்ஏ பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப் பப்பட்டன. கடந்த 1ஆம் தேதி பரிசோதனை அறிக்கை கிடைத்தது.

ஜெய்ப்பூர் போக்சோ நீதிமன்றத் தில் வழக்கு விசாரணை நடை பெற்றது. அந்த நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கிய அய்ந்தே நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி கமலேசுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப் பட்டது.

இதுகுறித்து ஜெய்ப்பூர்  தெற்கு காவல்துறை  துணை ஆணையர் ஹரேந்திர குமார் கூறும்போது, "கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி மாலையில் குற்றம் நிகழ்ந்துள்ளது. அன்றிரவு 11 மணிக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது.

அப்போது முதலே காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டனர். அடுத்த நாளே குற்றவாளி கைது செய்யப்பட்டார். போக்சோ நீதி மன்றம் மிக விரைவாக விசா ரணையை நடத்தியது.

இதன் காரணமாக குற்றம் நிகழ்ந்த 9 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment