டில்லியில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான மல்யுத்த பிரிவில் தமிழ்நாடு சார்பில் கலந்து தேசிய அளவில் வெண்கலப் பதக்கத்தை வென்ற பதினோராம் வகுப்பு மாணவி அட்சயா திங்கள் காலை (25.10.2021) குருவரெட்டியூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஈரோடு மண்டல திராவிடர் கழக தலைவர் பா.பிரகலாதன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாஜலம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவி அட்சயாவை வாழ்த்தி பாராட்டி பேசினார். இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் க.மணிகண்டன், பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் பாலசுப்பிரமணியன், பெரியார் பண்ணையின் திராவிட நாற்று தே.தேவேந்திரன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டு மாணவி அட்சயாவை வாழ்த்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment