நியூசி.,யின் ஆக்லாந்தில் திடீரென அதிகரித்த கோவிட் பாதிப்பு: கட்டுப்பாடுகள் விதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

நியூசி.,யின் ஆக்லாந்தில் திடீரென அதிகரித்த கோவிட் பாதிப்பு: கட்டுப்பாடுகள் விதிப்பு

ஆக்லாந்து, அக்.15 நியூசிலாந்தில் கடந்த 55 நாட்களில் திடீரென கோவிட் பாதிப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளன. இந்த பாதிப்புகள் அனைத்தும் அங்குள்ள ஆக்லாந்தில் பதிவானதை அடுத்து, அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கோவிட் தொற்று உலகம் முழுவதும் பரவியிருந்த நிலையில், அதனை விரைவாக கட்டுப்படுத்த நியூசிலாந்து பல்வேறு கட்டுப்பாடு களை விதித்தது. இதன் பலனாக அந்நாட்டில் கோவிட் பாதிப்புகள் வேகமாக குறைந்தது. அதன்பின்னர், முழுமையாக தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தியதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனிடையே, டெல்டா வகை கோவிட் வைரசால் மீண்டும் அந்நாடு முழுவதும் வேகமாக பரவியது.

நியூசிலாந்தில் கடந்த 55 நாட்களில் 71 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகள் அனைத்துமே அங்குள்ள ஆக்லாந்து நகரத்தில் மட்டும் பதிவானதாகும். அந்நாட் டில் இதுவரை 4,831 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, 28 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இது குறைவுதான் என்றாலும், அங்கு குறிப்பிட்ட காலத்தில் பதிவான அதிகபட்ச பதிவாக பார்க்கப்படுகிறது. இத னால், அங்கு கடுமையான கட்டுப் பாடுகளை விதித்து பொது சுகாதார இயக்குனர் கரோலின் மெக்லனே உத்தரவிட்டார். மேலும், ஆக்லாந் தில் உள்ள 17 லட்சம் மக்களை கட்டாயம் வீட்டிலேயே இருக்கு மாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் தற்போது வரை தகுதியுள்ள 59 சதவீதம் பேருக்கு (24.9 லட்சம் பேருக்கு) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியபிறகே ஊரடங்கு கட்டுப் பாடுகள் விலக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment