"சுயமரியாதைச் சுடரொளி" ராசகிரி தங்கராசு அவர்களின் மதிப்புறு இறுதி மரியாதை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 8, 2021

"சுயமரியாதைச் சுடரொளி" ராசகிரி தங்கராசு அவர்களின் மதிப்புறு இறுதி மரியாதை!

மாலைகள் குவிந்தன - மக்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம்!

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அரிமா சங்கம் மூலம் விழிக்கொடை

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன துணைத் தலைவர் இராசகிரி கோ.தங்கராசு அவர்கள் 5.10.2021 இரவு 7.00 மணியளவில் முதுமை காரணமாக இயற்கை எய்தினார்.

உடனடியாக அவரது இரு கண்களும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு  பாபநாசம் அரிமா சங்கம் மூலம் கொடையாக வழங்கப்பட்டது.

பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர்  இரா. குணசேகரன் ஆகியோர் உடனடியாக ராசகிரி வந்து சேர்ந்து அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைத்தனர்.

இரவு 8.30 மணியளவில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் தமது மனித நேயமக்கள் கட்சி சார்பிலும், தொகுதி மக்கள் சார்பிலும் இறுதி மரியாதை செலுத்தினார்.

இரவு முதலே பொது மக்களும் இயக்கத்தவர்களும் வந்து மரியாதை செலுத்திக் கொண்டே இருந்தனர்.

06.10.2021 காலை திமுக மாவட்ட செயலாளர்  எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களது தலைமையில் திமுக தோழர்கள் தமிழ்நாடு அரசு கொறடா முனைவர் கோவி.செழியன், குடந்தை சட்டமன்ற உறுப்பினர்  .அன்பழகன்,   மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம்,  திமுக பொதுக்குழு உறுப்பினர்  சுந்தர ஜெயபால் மற்றும் திருப்பனந்தாள் ஒன்றிய திமுக செயலாளர் அண்ணாதுரை முதலியோர் மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் துணைத் தலைவருமான ராசகிரி கோ. தங்கராசு அவர்களின் இறுதிப் பயணம் - கழகத்தவர் தலைநிமிரும் வண்ணம் பெருந் திரளுடன் புறப்பட்டது

கழகத் தொழிலாளர் அணி செயலாளர் மு. சேகர், இராசகிரி இஸ்லாமிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இறுதி மரியாதை செலுத்திய வண்ணம் இருந்தனர்.

10 மணியளவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர்கலி.பூங்குன்றன், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் வாழ்விணையர் மோகனா அம்மையார், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் சி. தங்காத்தாள், 

பாபநாசம் ஓய்வூதியர்கள் சங்கத்தினர்,  அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச்செயளாளர்  எம்.ரெங்கசாமி (கட்சிப் பொறுப்பாளர்களுடன்),  இந்திய யூனியன் முஸ்லீம் லீக்  தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் கே..இராஜாமுகமது (தோழர்களுடன்).

மன்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆர்.பி. சித்தார்த்தன், நீடாமங்கலம் .சிவஞானம், மன்னை மாவட்ட செயலாளர்  கணேசன், மாநில விவசாய அணி செயலாளர் இராயபுரம் கோபால்,  தஞ்சை மாவட்ட திராவிடர்கழக செயலாளர்  .அருணகிரி,   பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் நகர செயலாளர் .கபிலன், பட்டுக்கோட்டை மாவட்ட கழக தலைவர் அத்திவெட்டி வீரையன், செயலாளர் சிதம்பரம். 

இந்திய தேசிய காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் பூபதிராஜா, மாவட்டப்பொறுப்பாளர் வயலூர் இராமநாதன்.

...தி.மு.. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் திரு.அய்யப்பன் [] துரை.சண்முகப்பிரபு (கட்சித் தோழர்களுடன்),

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொறுப்பாளர்  உறவழகன் (இயக்கப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுடன்),

தஞ்சை மாவட்ட (திமுக) களிமேடு செல்வம், மதுரை தோழர் பி. வரதராசன் (வாழ்விணையரோடு), காரைக்குடி மாவட்டக் கழகத் தலைவர் அரங்கசாமி, செயலாளர் வைகறை,

மேனாள் அமைச்சர் தஞ்சை உபயதுல்லா, 

பெரியார் வீர விளை யாட்டுக் கழகத் தலைவர் பேரா.சுப்ரமணியன், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள், பணியாளர்கள்.

பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், அறங்காவலர்கள், 

கபிஸ்தலம் மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்,அறங்காவலர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

பல்வேறு கிராமங்களிலிருந்தும் பொதுமக்களும், வர்த்தக பெருமக்களும் இரங்கல் செலுத்திய வண்ணம் இருந்தனர்.

 தஞ்சை, குடந்தை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி மாவட்டத்தோழர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

  அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர்  அய்யப்பன் [] துரை.சண்முகப்பிரபு தமது இயக்கத்தவருடன் மரியாதை செலுத்தினார்.

இரங்கல் கூட்டம்

பிற்பகல் 2.30 மணிக்கு இரங்கல் கூட்டம் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது.

குடந்தை மாவட்ட தலைவர் கு.நிம்மதி, குடந்தை மாவட்ட செயலாளர் சு.துரைராசு, தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங்,  மதுரை தோழர் வரதராசன், தஞ்சை மண்டலத்தலைவர் மு.அய்யனார், காப்பாளர் நெய்வேலி செயராமன்,   கழக அமைப்புச்செயலாளர் மதுரை செல்வம்,  கழக அமைப்பாளர் இரா.குணசேகரன்,  கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், தஞ்சை வடக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் கோவி.அய்யாராசு, மாநில பகுத்தறிவாளர்கழக தலைவர் மா.அழகிரிசாமி, மன்னை மாவட்டத்தலைவர் சித்தார்த்தன்,  கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர்  பாரதி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டிகேஜி.நீலமேகம், மாவட்ட திமுக செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம், திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் ஆகியோர் இரங்கலுரை ஆற்றினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு..ஸ்டாலின், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா ஆகியோரின் இரங்கல் செய்தியை கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் படித்தார்.

 இரங்கல் நிகழ்வு தொடங்கிய உடன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களது உருக்கமான அறிக்கையை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் படித்தார்.

இறுதியாக திராவிடர்கழக துணைத் தலைவர்   கலி.பூங்குன்றன் அவர்களது இரங்கலுரை அனைவரையும் ஆற்றுப்படுத்தியது. அனைவரும் இரு நிமிடம் எழுந்து நின்று அமைதிக் காத்தனர்.

 இரு நிமிடம் அமைதியாக இரங்கல் மரியாதை செலுத்திய பின்னர், கோ.தங்கராசு அவர்களின்  உடல் அடக்கம் செய்திட ஊர்வலமாகப்புறப்பட்டு எவ்வித சடங்குகளுமின்றி இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

இரங்கல் கூட்டத்தின் நிகழ்வுகளை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வி.மோகன் ஒருங்கிணைத்தார்.

சாரை சாரையாக பல்வேறு தரப்பினரும் இறுதி மரியாதை செலுத்தியது திராவிடர் கழகத்தின் பெருமையை உணர்த்துவதாக அமைந்திருந்தது.

ஒரு கருப்புச் சட்டைக்காரர் எப்படி வாழ்ந்துகாட்ட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டினார் சுயமரியாதைச் சுடரொளி ராசகிரி தங்கராசு ஒளிர்கிறார்.

No comments:

Post a Comment