உள்நாட்டு விமான பயணியர் செப்டம்பரில் அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 8, 2021

உள்நாட்டு விமான பயணியர் செப்டம்பரில் அதிகரிப்பு

மும்பை, அக்.8 இந்தியாவில் உள்நாட்டு விமான பயணியர் எண்ணிக்கை, கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட, செப்டம்பரில் சற்று அதிகரித்து உள்ளதாக, இக்ரா நிறுவனமான தெரிவித்துள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கடந்த ஆகஸ்டில், உள்நாட்டு பயணியர் எண்ணிக்கை 67 லட்சமாக இருந்த நிலையில், செப்டம்பரில் 69 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடும் போது இது 74 சதவீதம் அதிகமாகும்.அத்துடன், விமானங்கள் புறப்பாடும் செப்டம்பரில் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் விமானங்கள் புறப்பாடு நாள் ஒன்றுக்கு 1,321 என்று இருந்த நிலையில், நடப்பு ஆண்டு செப்டம்பரில் 2,100 ஆக அதிகரித்து உள்ளது.ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம், செப்டம்பர் மாதம் 18ஆம் தேதியிலிருந்து 85 சதவீத பயணியருடன் செல்லலாம் என அறிவித்துள்ளது.

அத்துடன், விழாக் காலமும் வருவதை அடுத்து, பயணியர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment