புதுடில்லி, அக்.8 நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவன மான எல்.அய்.சி., புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், அதன் பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
எல்.அய்.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டின் போது, அதன் பங்குகளை வெளிநாட்டு முதலீட்டா ளர்களும் வாங்க வகை செய்யும் விதமாக, சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் 20 சதவீத பங்குகள் வரை வெளிநாட்டு முத லீட்டாளர்கள் வாங்க ஏதுவாக, இந்த சட்டத் திருத்தம் இருக்கக் கூடும்.
இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் பட்சத்தில், வெளி நாட்டு முதலீட்டாளர்கள் அரசின் அனு மதி இன்றி, ஆட்டோமேட்டிக் ரூட் வாயிலாகவே எல்.அய்.சி., நிறு வன பங்குகளை வாங்கிக் கொள்ள முடியும்.
இது குறித்து, அரசு அதிகாரிகள் கலந்து பேசி யுள்ளனர். வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்கள், இந்திய காப்பீட்டு நிறுவ னங்களில் 74 சதவீதம் வரை முதலீடு செய்ய அனுமதிக் கப்படுகிறது என்ற போதி லும், இந்த விதி எல்.அய்.சி., நிறு வனத்துக்கு பொருந்தாது.
இதற்கு நாடாளுமன்றத் தில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
இதையடுத்தே, அரசு இதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது.
எல்.அய்.சி.,யின் புதிய பங்கு வெளியீட்டை, அடுத்த மார்ச் மாதத் துக்கு உள்ளாக நடத்த வேண்டும் என அரசு முயற்சிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment