மெய்நிகர் உலகிற்கு வரும் உணர்வுக் கையுறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

மெய்நிகர் உலகிற்கு வரும் உணர்வுக் கையுறை

'விர்சுவல் ரியாலிட்டி' என்ற மெய்நிகர் தொழில்நுட்பம் பெரும்பாலும் காட்சி சார்ந்ததாகவே இருக்கிறது. மெய்நிகர் காட்சிக் கருவியை கண்ணுக்கு அணிந்துகொண்டால், ஒரு கிராபிக்ஸ் உலகத்தை கண்டு ரசிக்கலாம். அதில் நடக்கலாம், பொருட்களை நகர்த்தலாம். ஆனால், தொடு உணர்வு இருக்காது.

சென்ஸ்குளோவ் நோவா உருவாக்கியுள்ள கையுறை, அந்தக் குறையை போக்க இருக்கிறது. மெய்நிகர் கருவியை அணிந்துகொண்டு, சென்ஸ்குளோவ் கையுறையையும் அணிந்து கொண்டால், மெய்நிகரில் தெரியும் எதைத் தொட்டாலும் அதை தொடும் உணர்வை இந்தக் கையுறைகள் தரும்.அதுமட்டுமல்ல, பொருட்களை கையாளும்போது அவற்றின் மேற்பரப்பின் சொரசொரப்பு அல்லது வழுவழுப்பு முதல், எதிர்விசை போன்றவற்றையும் இக் கையுறை மூலம் அணிந்தவரால் உணர முடியும்.

மின்னணு கம்பிகள் மற்றும் பருத்தி இழைகளைக் கலந்து தயாரிக்கப்பட்ட, 'ஸ்மார்ட் டெக்ஸ்டைல்' துணிகளால் சென்ஸ்குளோவ் கையுறைகள் தயாராகின்றன.கணினி மற்றும் மெய்நிகர் மென்பொருள்களால் இயக்கப்படும் இந்த கையுறைகளுக்கு, கம்பிகளால் மூலம் அழுத்தம், அசைவு போன்ற தொடு உணர்வுகள் கடத்தப்படுவதாக சென்ஸ்குளோவ் விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர்.

கடந்த ஜனவரியில் அறிமுகமான சென்ஸ்குளோவ், தற்போது விற்பனை கட்டத்தை எட்டியுள்ளது.மெய்நிகர் விளையாட்டு, புதிய தொழிற் பயிற்சித் துறை மற்றும் ராணுவம் போன்ற துறையினர் இந்த உணர்ச்சி தரும் கையுறையை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment