வெந்த புண்ணிலே வேல் வேளாண் சட்டங்களை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கிறார்களாம்! - எதிர்க்கட்சிகள் மீது மோடி கடும் தாக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 3, 2021

வெந்த புண்ணிலே வேல் வேளாண் சட்டங்களை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கிறார்களாம்! - எதிர்க்கட்சிகள் மீது மோடி கடும் தாக்கு

 புதுடில்லி, அக்.3  விவசாய சீர்திருத் தங்களை அரசியல் காரணமாக எதிர்க்கிறார்கள் என்று எதிர்க் கட்சிகள் மீது பிரதமர் மோடி ஆவேச தாக்குதல் தொடுத்துள்ளார்.

ஒன்றிய அரசு விவசாய சீர்திருத் தங்கள் என்ற பெயரில் 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களை விவசாய அமைப்புகள் எதிர்த்து டில்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்துகின்றன. இந்த சட்டங்களை எதிர்க்கட்சிகள் முழுமூச்சுடன் எதிர்க்கின்றன.

இந்தநிலையில், பிரதமர் மோடி, ‘ஓப்பன்என்ற ஆங்கில பத்திரிகைக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அவரிடம் வேளாண் சட்டங்கள் பற்றியும், போராடும் விவசாய அமைப்புகள் தொடர்ந்து  வலியு றுத்தியும், அவற்றை அரசு திரும்ப மறுப்பது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மோடி விரிவாக பதில் அளித்து கூறியதாவது:- விவசாய அமைப்புகளின் போ ராட்டங் களைப் பொறுத்தமட்டில் ஆரம்பத் தில் இருந்தே, அவர்களுக்கு உடன் பாடு இல்லாத குறிப்பிட்ட அம்சங் கள் குறித்து விவாதிக்க தயார் என்று அரசு கூறி வந்துள்ளது. இதை மாற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்பு கிறோம் என இதுவரை யாரும் வரவில்லை. வேளாண் சட்டங் களைப் பொறுத்தவரையில், எல்லா வழிகளி லும் நமது நாட்டின் சிறிய விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்க எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவான சீர்திருத்தங்களை இனன்றைக்கு எதிர்ப்பவர்கள் யார்?

அவர்களிடம் (எதிர்க்கட்சிகள்) அறிவுசார் நேர்மையின்மை, அரசியல் வஞ்சம் என்ற வார்த்தை களுக்கான உண்மையான அர்த் தத்தை  நீங்கள் பார்க்க முடியும்.

அவர்கள், நாங்கள் இப்போது செய்துள்ள அதே செயலை (விவசாய சீர்திருத்தங்கள்) செய்யுமாறு, அன்றைக்கு மாநில முதல் அமைச்சர் களுக்கு கடிதங்களை எழுதியவர்கள் தான், நாங்கள் கொண்டு வந்துள்ள அதே சீர்திருத்தங்களை செய்வோம் என்று தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவர்கள் தான். அதே சீர்திருத்தங்களை செய் கிற போது, அவர்கள் அப்படியே முற்றிலுமாய் பல்டி அடிக்கிறார்கள். அறிவுசார் நேர்மையின்மையை காட்டுகிறார்கள். விவசாயிகள் என்ன பலன் அடைவார்கள் என் பதை விட்டு விட்டு, தங்களுக்கு அரசியல் ரீதியாக என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கிறார்கள்.

நேர்மையான மனதுடன், விமர் சகர்களை நான் பெரிதும் மதிக்கி றேன். ஆனால் விமர்சகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. பெரும்பாலும் குற்றச் சாட்டுகளை மட்டுமே சிலர் முன் வைக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment