முழு அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி அக் 8 உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரி மாவட் டத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந் தனர். இச்சம்பவத்தில் ஒன்றிய இணையமைச்சரின் மகனுக்கு தொடர்பு இருந்ததால், அவரை கைது செய்ய கோரிக் கைகளை வலுத்தன.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இரு வழக்குரைஞர்கள் இக்கோர நிகழ்வு குறித்து உச்சநீதிமன்ற நீதி பதிக்குக் கடிதம் எழுதியிருந்தனர். மிகவும் மோசமான இந்த நிகழ்வு குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள் வதாக அறிவித்திருந்தது.
இந் நிலையில் இவ்வழக்கு தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கரிமா பிரசாத்திடம் பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டது.
உத்தரப்பிரதேச சாமியார் தலைமையிலான அரசு இந்த விவ காரத்தை சரியாக கையாளவில்லை என்றும் கடுமையான மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ள தாகவும் தலைமை நீதிபதியிடம் எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.
அப்போது பேசிய அரசு வழக்குரைஞர் பிரசாத், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் குமார் சிறீவஸ்தவா தலை மையில் ஒருநபர் விசாரணை ஆணை யம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆணையத்தால் இரண்டு மாதங் களில் விசாரணை அறிக்கை அர சிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, “வழக்கில் யார் யாரைக் கைது செய்துள்ளீர்கள்? யார் மீதெல்லாம் வழக்குப்பதிவு செய் துள்ளீர்கள்? வழக்கு விசாரணை எந்த நிலைமையில் உள்ளது? போன்ற தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கையை நாளை (8.10.2021) சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார். வழக்கு விசா ரணை மீண்டும் நாளை நடை பெறும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதற்கிடையில், இறந்துபோன விவசாயிகளில் ஒருவரின் தாயார் மகனின் இறப்பு தகவலை கேட்டு ஆபத்தான நிலையில் இருப்ப தாகவும், உடனடி மருத்துவ உதவி தேவைப் படுவதாகவும் நீதிமன்றத் தில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, உடனடியாக அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குமாறு மாநில அரசுக்கு உத்தர விட்டார் என்பது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment