உப்பு உருவாக்கிய குளிர் சாதனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 14, 2021

உப்பு உருவாக்கிய குளிர் சாதனம்!

மின் வசதி எட்டாத இடத்தைக் கூட சூரிய ஒளி தொடுகிறது. இது, கட்டடங்களை சூடேற்றினாலும், அதே சூரிய ஒளியை வைத்து கட்டடங்களை குளிர்ச்சியாக வைக்கவும் முடியும் என்பதை சவுதி அரேபியாவிலுள்ள மன்னர் அப்துல்லா அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

சூரிய ஒளியில் சூடேறிய நீரில், அம்மோனியம் நைட்ரேட் உப்பை கரைத்தால், அது கரையும்போது நீரின் வெப்பத்தை உள்வாங்கி, நீரை மிகவும் குளிர்ச்சியானதாக மாற்றிவிடுகிறது. இந்த அமைப்பை கட்டட சுவர்களுக்கு நடுவே உருவாக்கினால் மொத்த கட்டடமும் குளிர்ச்சியடையும். இதே நுட்பத்தை வைத்து, உணவுப் பொருட்களை குளிர்ச்சியாக தொடர்ந்து 15 மணி நேரத்திற்கு உப்புக் கரைசல் திரவத்தால் வைத்திருக்க முடியும். உப்பு கரைந்ததும் குளிர்ச்சி குறையும். அப்போது, நீரை மீண்டும் சூரிய ஒளியால் வெப்பமேற்றி, ஆவியாக்கி, உப்புக் கட்டிகளை தனியே பிரித்தெடுத்து, மறுபடியும் நீரையும், உப்பையும் கரைத்து மறுசுழற்சி செய்யலாம். உப்புக் கரைசல் மற்றும் சூரிய ஒளி சூடேற்றத்தை செய்யும் கருவி ஒன்றை உருவாக்கும் தீவிர முயற்சியில் அப்துல்லா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment