மூடத்தனம் உலகம் எங்கும் பரவியுள்ளது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

மூடத்தனம் உலகம் எங்கும் பரவியுள்ளது

தோசமிருக்கிறது என்று கூறி முதலில் அரிசி குக்கரைத் திருமணம் செய்து 4 நாள் கள் குடும்பம் நடத்தி பிறகு மணவிலக்கு பெற்று பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நகைப்பை ஏற்படுத்தி யுள்ளது - இங்கல்ல இந்தோனேசியாவில். திருமணத்தடை, குழந்தை பிறக்கவில் லையா என்று கூறி இந்தியாவில் மட்டு மல்ல உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஜோதிடர்கள் பணம் பார்க்கின்றனர். இருப்பினும் அது இங்கிருந்துதான் சென் றது என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டுமா?

ஜகார்த்தாவிற்கு அருகில் உள்ள ஒரு நகரத்தில் இந்து குடும்பத்தைச் சேர்ந்த கொய்ருல் அனாம் என்பவருக்கு திரு மணம் செய்ய பெண் பார்த்துள்ளனர். இருவரது ஜாதகக்கட்டையும் பார்த்த அங்குள்ள ஒரு ஜோதிட ஆசாமி முதலில் நீ ஒரு அரிசி குக்கரை திருமணம் செய்துகொள்ளவேண்டும்.  அதனுடன் குடும்பம் நடத்தி 4 நாள்கள் கழித்து அதை விவாகரத்துப்பெற்று பிறகு பெண்ணை திருமணம் செய்துகொள் என்றார்.

அந்த நபரும் அப்படியே பதிவு அலுவலகத்திற்கு குக்கரோடு சென்று எனக்குத் திருமணம் செய்துவையுங்கள் என்று கூறியுள்ளார். 

அந்த நாட்டுச்சட்டப்படி இது போன்ற மூடத்தனத்தை தட்டிக்கேட்க உரிமை இல்லை. கழுதையைக் கூட்டிச்சென்று திருமணம் செய்துவை என்றாலும் திரு மணம் பதிவு செய்துவைக்கவேண்டும், அவ்வளவுதான்,

அதே போல் அவர்களும் குக்கரோடு திருமணம் செய்துவைத்தனர். பின்னர் அங்குள்ள கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு அனைவருக்கும் விருந்து வைத்தார். 

4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பதிவு அலுவலகத்திற்குச்சென்று நான் இந்த குக்கரை மணவிலக்கு செய்கிறேன் எனக்கு மணவிலக்கு செய்துவையுங்கள் என்றார். அவர்களும் அவ்வாறே அவரது குக்கருடனான திருமணப் பதிவை ரத்து செய்தனர்.

பின்னர் கையோடு கூட்டிச்சென்ற மணமகளுக்கும் தாலிகட்டி திருமணம் செய்து அதை பதிவு செய்துவிட்டார், 

இந்தோனேசிய தீவுகளில் இறந்தவர் களை பதப்படுத்தி வைக்கும் பழக்கம் உண்டு, சிலர் நூற்றாண்டுகளாக பதப் படுத்திவைக்கப்பட்ட உடல்களை தூக்கி கொண்டு இதற்கும் எனக்கும் திருமணம் செய்து வை என்றும் கூறும் கோமாளித் தனம் அங்கு இன்றும் நடக்கிறது.

No comments:

Post a Comment