தமிழ் நாட்டின் பல்கலைக்கழகங்களில் ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் பயோடெக் உள்ளிட்ட முதுநிலைப்படிப்புகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற தமிழர் தலைவர் அவர்களை பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் நாசர் (அண்ணா பல்கலைக்கழகம்), மு.கார்த்திக் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்) இரா.இளையகுமார், கலிய பெருமாள், (டாடா சமூக அறிவியல் கழகம், மும்பை) ஆகியோர் 14.10.2021 அன்று பெரியார் திடலில் சந்தித்து வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தனர். திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி உடன் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment