கழகத்தின் காப்பாளரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான ராசகிரி கோ. தங்கராசு (வயது 97)அவர்கள் (5-10-2021) நேற்று இரவு உடல்நலக்குறைவால் மறைவுற்றார். ராசகிரியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு கழகத்தின் சார்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் திருமதி மோகனா வீரமணி, பொதுச்செயலாளர் இரா. ஜெயக்குமார், ஆர். தங்காத்தாள், கு.நிம்மதி, சு.துரைராஜ், வழக்குரைஞர் அமர்சிங், மோகன் மற்றும் கழகத் தோழர்கள் உள்ளனர். ராசகிரி தங்கராசுவின் மகன்கள் பாண்டியன், பூவானந்தம் ஆகியோருக்கு கழகத் துணைத் தலைவர் ஆறுதல் கூறினார். பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க அன்பழகன் மற்றும் திமுக, மமக பொறுப்பாளர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment