புதுடில்லி. அக் 12- கச்சா எண் ணெய் விலை 3 ஆண்டு களாக இல்லாத அள வுக்கு உச்சத்தை அடைந் துள்ளது மட்டும் அல்லா மல் கச்சா எண்ணெய் விற்பனை சூடுபிடித்துள்ள காரணத்தால் சவுதி மற் றும் பிற அரபு நாடுகள் கரோனாவுக்கு முந்தைய காலக்கட்டத்தை விடவும் அதிகளவிலான வருமானத்தை பெற துவங்கியுள்ளன.
இதன் மூலம் கரோனா காலத்தில் சவுதி அரே பியா எதிர்கொண்ட வணிக பாதிப்புகள் பெரிய அள வில் குறைந்துள்ளதாக தெரிகிறது.
கரோனா தொற்று காரணமாக 18 மாதங் களுக்கு முன்பு கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதன்மையாக இருக்கும் சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய் உற் பத்தி அளவீட்டை பெரிய அளவில் குறைத்தது.
கரோனா தொற்றில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் தற் போது உலக நாடுகள் முழுவதும் எரிபொருள் தேவை அதிகரித்துள்ள காரணத்தால் கரோனா வுக்கு முந்தைய அளவான ஒரு நாளுக்கு 9.8 மில்லி யன் பேரல் அளவில் உற் பத்தி செய்துள்ளது. உற் பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யை வேகமாக விநியோகம் செய்யும் பணிகளையும் சவுதி அரேபியா துவங்கியுள்ள காரணத்தால் வணிகம் மீண்டும் சூடுப்பிடித்துள் ளது.
ஒருப்பக்கம் கச்சா எண்ணெய் விலை 80 டாலர் வரையில் அதி கரித்துள்ளது, மறுப்புறம் கச்சா எண்ணெய்க்கான தேவையும் அதிகரித்துள் ளதால், உற்பத்தி அதிகரிக் கப்பட்ட நிலையிலும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 80 டாலர் வரையில் அதிகரித்துள் ளது. இதனால் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் வணிக வரு வாய் உயர்வை தொட்டு உள்ளது,
இதனால் 2022 முடி வில் மிகப்பெரிய தொகையை வருமானமாக பெறும் என கணிக்கப்பட்டு உள் ளது. ஓபெக் அமைப்பு நாடுகளுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பான ஆண் டாக அமைந்துள்ளது, உற்பத்தி, ஏற்றுமதி, விலை அனைத்தும் சாத கமாக அமைந்துள்ளது என எண்ணெய் வர்த்த கத்தின் தலைவர் பென் லாக்காக் தெரிவித்துள் ளார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு மூலம் அதிக வருமானத்தை பார்க்க சவுதி துவங்கியுள்ள நிலையில் அடுத்த சில மாதங்களுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தியில் எவ்விதமான மாற்றமும் செய்யாது என கணிக் கப்படுகிறது. இதனால் சந்தையில் தேவை அதி கரிக்கும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்ப்பு உள்ளது.
இதனால் கச்சா எண் ணெய்-காக வெளிநாடு களை நம்பியிருக்கும் இந் தியா போன்ற நாடுகள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவா கியுள்ளது. மோடி தலை மையிலான ஒன்றிய அரசு விலைவாசி மற்றும் பண்டிகை கால வணிகம் குறித்து எவ்விதமான திட்டமும் இல்லாமல் தொடர்ந்து அதிகப்படி யான வரியின் கீழ் பன் னாட்டு சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வரு கிறது, இதனால் சாமா னிய மக்கள் அதிகளவி லான பாதிப்பை எதிர் கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment