நாட்டைவிட்டுதப்பி ஓடும் முன்பே தனது சகோதரி பெயரில் வெளிநாட்டில் நிறுவனம் தொடங்கி - அதில் கருப்புப்பணத்தை முதலீடு செய்த நீரவ் மோடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

நாட்டைவிட்டுதப்பி ஓடும் முன்பே தனது சகோதரி பெயரில் வெளிநாட்டில் நிறுவனம் தொடங்கி - அதில் கருப்புப்பணத்தை முதலீடு செய்த நீரவ் மோடி

ஜனவரி 2018ஆம் ஆண்டு வைர வியாபாரி மற்றும் நிதி மோசடி குற்றவாளி யான நீரவ் மோடி இந்தியாவில் இருந்து தப்பி ஓடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவருடைய சகோதரி புர்வி மோடி பிரிட் டிஷ் வெர்ஜின் தீவுகளில் நிறுவனத்தை நிறுவி, சிங்கப்பூரின் ட்ரைடென்ட் டிரஸ்ட் நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு அறக்கட்டளையின் நிறுவன பாதுகாவல ராக செயல்பட்டார்.

புலனாய்வு நாளிதழ் நடத்திய ஆய்வில், ப்ரூக்டன் மேனேஜ்மெண்ட் லிமிட்டட் என்று அழைக்கப்படும் அந்த நிறுவனம் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், டெபா சிட் டிரஸ்டின் கார்ப்பரேட் பாதுகாவலராக செயல்பட நிறுவப்பட்டது என்பது தெரிய வந்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலிக் கடிதங்கள் மூலம் மோசடி செய்ததாக குற் றம் சுமத்தப்பட்ட நிறுவனமான ஃபையர் ஸ்டார் நிறுவனத்தின் கிரியேடிவ் இயக்கு நராக பணியாற்றிய போது கிடைத்த ஊதி யம் மற்றும் வருமானத்தை ப்ரூக்டன் நிறு வனத்தில் முதலீடாக செலுத்துவதாக புர்வி, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் நிறுவனங் கள் துவங்குவதற்கான ஒருங்கிணைப்புப் படிவத்தில் கூறியுள்ளார்.

இந்த புதிய நிறுவனம் மற்றும் அறக் கட்டளைக்கான ஆவணங்களும் பண் டோரா பேப்பர்களில் இடம் பெற்றுள்ளது. நீரவ் மோடி அவரது உறவினர் ஆகியோர் பெயரில் அமலாக்கத்துறை தொடுத்த நிதி மோசடி வழக்கில் புர்வியும் குற்றவாளியாக இணைக்கப்பட்டிருந்தார். தற்போது அப்ரூ வராக மாறியுள்ள அவருக்கு முழு மற்றும் உண்மையான வெளிப்பாட்டின் நிபந்த னையின் பேரில் நீதிமன்றம் மன்னிப்பு வழங்கியதால் வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது.

பெல்ஜியன் நாட்டு பிரஜையான நீரவ் மோடியின் சகோதரி புர்விக்கு எதிராக பன்னாட்டுக் காவல்துறையான இண்டெர் போல் சிவப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

புர்வி மோடியின் வழக்குரைஞர் மன வேந்திர மிஷ்ரா இந்தியன் எக்ஸ்பிரசுக்கு மின்னஞ்சல் மூலம் பதில் அளித்தார். அதில், புர்வி மோடிக்காக இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வழக்கு ரைஞர்கள் நாங்கள். உங்கள் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருக்கும் குற்றச்சாட்டினை நாங்கள் நிராகரிக்கின்றோம். நிதி மோசடி தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதால் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துகள் கூற விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

புர்வியும் அவரது சகோதரர் நீரவ் மோடி யும் மூன்று பி.வி.அய். நிறுவனங்களான இன்டெக்ரேட்டட் இன்வெஸ்டிங் லிமிட் டட், எக்ஸ்க்ளூசிவ் கன்சல்டண்ட் லிமிட் டட், மற்றும் பனேரா அசெட்ஸ் இன்க் என்ற மூன்று நிறுவனங்களின் உரிமையாளர் களாக உள்ளனர். இந்த மூன்று நிறுவனங் களும் பண மோசடிக்கு நீரவ் மோடியால் பயன்படுத்தப்பட்டது என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது.

ட்ரிடெண்ட் அறக்கட்டளையின் ஆவ ணங்கள் படி, 2012ஆம் ஆண்டு இண்டெக் ரேடட் இன்வெஸ்டிங் துபாயில் டையா ஜெம்ஸ் FZC என்ற கிளையை துவங்கியது. அதே போன்று எக்ஸ்க்ளூசிவ் கன்சல் டன்ட்ஸ் லிமிட்டட், ஜனவரி 2012ஆம் ஆண்டில் யுனிவெர்சல் ஃபைன் ஜுவல்லரி FZE என்ற நிறுவனத்தை துவங்கியது. அமலாக்கத்துறை இந்த இரண்டு நிறு வனங்களையும்டம்மி நிறுவனங்கள்என்று 265 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை புர்விக்கு திருப்ப பயன்படுத்தப் பட்டது என்றும் கூறியுள்ளது.

டிரிடன்ட் டிரஸ்ட் சிங்கப்பூர் நிர்வகிக் கும் மான்டி கிறிஸ்டோ டிரஸ்டின் உரிமை யாளர் என்று ஆவணங்கள் காட்டுகின்றன.

2013ஆம் ஆண்டு,  இந்த அறக்கட்டளை, பெல்வெதெரே ஹோல்டிங்ஸ் குரூப் லிமிட் டட் என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளது என்றும் ஆவணங்கள் சுட்டிக்காட்டு கின்றன. 6.25 மில்லியன் யூரோக்கள் கொண்டு லண்டனில், பெல்வெதெரே ஹோல்டிங்க்ஸ் குரூப் சொத்து ஒன்றை வாங்கியுள்ளது என்று 2017ஆம் ஆண்டு அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியது. புர்விக்கு சொந்தமான இந்த சொத்து அமலாக்கத்துறையால், வங்கி மோசடி செய்யும் போது நீரவ் மோடியால் உருவாக் கப்பட்டதாகக் கூறப்படும் குற்றத்தின் வரு மானத்தின் ஒரு பகுதி என்று கூறி பட்டி யலிட்டுள்ளது.

பஞ்சாப் தேசிய வங்கி மோசடி தொடர் பாக வெளியே தெரிவதற்கு முன்பு, 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரம் நீரவ் மோடி இந்தியாவில் இருந்து வெளி யேறினார். 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நீரவ் மோடி இங்கிலாந்தில் கைது செய்யப் பட்டார். தற்போது அவர் லண்டனில் வசித்து வருகிறார்

கீழ் நீதிமன்றத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று அறிவிக் கப்பட்ட உத்தரவை எதிர்த்த மேல்முறை யீட்டு மனு முழுமையாக விசாரிக்கப்படுமா என்ற கேள்வியுடன் புதிய மேல்முறையீட்டு விண்ணப்பத்துடன் நீரவ் மோடி இங்கிலாந்தின் உயர் நீதிமன்றத்தை ஒரு வாய்வழி விசாரணைக்காக நாடினார்.

ஏப்ரல் மாதத்தில், இங்கிலாந்து அரசு நீரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்து செல்ல ஒப்புதல் வழங்கியது. இதற்கு முன்பு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி அன்று இங்கிலாந்து நீதிமன்றம் நீரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கான உத்தரவை பிறப் பித்தது. குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தர விட அவருக்கு எதிரான ஆதாரம் போது மானதாக இருந்தது.

ஜூலை 1ஆம் தேதி, நீரவ் மோடியால் திறக்கப்பட்ட இங்கிலாந்தில் உள்ள புர் வியின் கணக்கிலிருந்து ரூ. 17.25 கோடியை மீட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தது. புர்வி இந்த கணக்கு தொடர்பாக விவரங் களை அளித்த பிறகு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது என்று அமலாக்கத்துறை கூறியது. இதுவரை, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மோடிக்கு சொந்தமான 2,400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது.


No comments:

Post a Comment