இலக்கியத்துக்கான நோபல் பரிசு : தான்சானியா எழுத்தாளர் தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 8, 2021

இலக்கியத்துக்கான நோபல் பரிசு : தான்சானியா எழுத்தாளர் தேர்வு

ஸ்டாக்ஹோம்,அக்.8- தான் சானியா எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு (73) இலக்கி யத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கி யம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. கடந்த 4-ஆம் தேதி முதல் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் இலக்கியத் துக்கான நோபல் பரிசு, தான் சானியா எழுத்தாளர் அப்துல் ரசாக்குர்னாவுக்கு நேற்று (7.10.2021)அறிவிக்கப்பட்டது. இவர் இதுவரை 10 நாவல்களை யும் ஏராளமான சிறுகதை களையும் எழுதியுள்ளார்.

தான்சானியாவின் சான்சபா தீவைச் சேர்ந்த இவர் கடந்த 1960-இல் அகதியாக பிரிட்டனில் குடியேறினார். இதன் காரண மாக இவரது படைப்புகளில் அகதிகள் அனுபவிக்கும் துய ரங்கள், காலனி ஆதிக்கம் உள் ளிட்ட பிரச்சினைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. இதற்காக இவர் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அப்துல் ரசாக் குர்னா கூறும்போது, "உலகின் மிகப்பெரிய பரிசு கிடைத் திருப்பது இன்ப அதிர்ச்சியாக உள்ளது. எனக்கு கிடைத்த நோபல் பரிசை ஆப்பிரிக்க மக்க ளுக்கும் எனது வாசகர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment