வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் நிரம்பாத இடத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்வித்துறை உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 29, 2021

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் நிரம்பாத இடத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்வித்துறை உத்தரவு

சென்னை, அக்.29 வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலியாக இருக்கும் இடங்களை பிற பிரிவு மாணவர் மூலம் நிரப்பலாம் என்று தமிழ்நாடு உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலியாக இருக்கும் இடங்களை பிற பிரிவு மாணவர் மூலம் நிரப்பலாம் என்று தமிழ்நாடு உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது, தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கையின்போது, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருப்பின், அதனை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம் என்று தமிழ்நாடு உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒரு பிரிவில் ஏற்படும் காலியிடங்களை, மற்றோர் பிரிவு மாணவர் மூலம் சுழற்சி முறையில் நிரப்ப தமிழ்நாடு உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உடனடி குடும்ப அட்டை

தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை,அக்.29- தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒரு பெண்மணி கணவரால் நிராதரவாக கைவிடப் பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசித்து வரும் நிலையில், அவரது ஆதார் எண் கணவர் வைத்திருக்கும் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள நேர்வுகளில், சம்மந்தப்பட்ட பெண் மற்றும் அவரை சார்ந்துள்ள குழந்தைகள் தனியாக வசித்து வருவது தணிக்கை மூலம் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், எழுத்து மூலமான வாக்குமூலம் பெற்று, சம்பந்தப்பட்ட அலுவலர் தனது அதிகார வரம்பினை பயன்படுத்தி, குடும்பத் தலைவரின் அனுமதியில்லாமல் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயரினை குடும்ப அட்டையிலிருந்து நீக்கலாம். அதேபோல், தனியாக வாழும் சம்பந்தப்பட்ட பெண்மணிகள் புதிய குடும்ப அட்டைக் கோரும்போது சட்டபூர்வமான நீதிமன்ற விவாகரத்துச் சான்று போன்ற ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்க வலியுறுத்தாமல் புதிய குடும்ப அட்டைவழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்நிலை அலுவலர் களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment