பெரியார் பிஞ்சு அருவியின் விடுதலை வளர்ச்சி நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 27, 2021

பெரியார் பிஞ்சு அருவியின் விடுதலை வளர்ச்சி நிதி

 ஈரோடு மாவட்ட திராவிடர் கழக செயலாளர் மா.மணிமாறன், மகளிரணி பொறுப்பாளர் கவிதா மணி மாறனின் புதிய கவிதா டெக்ஸ்டைல்ஸ் (ஆண்களுக்கான சட்டை,வேட்டி, துண்டு) புதிய துணிக்கடையை பேராசிரியர் .காளிமுத்து பெரியார் பிஞ்சு அருவி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்,கவிதா மணிமாறன் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார், திறப்பு விழா மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூபாய் 500/- அய் மாநில கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகத்திடம் பெரியார் பிஞ்சு அருவி மகிழ்வுடன் வழங்கினார். புதிய கடை திறப்பு விழாவில் மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம், மாவட்ட கழக தலைவர் கு.சிற்றரசு, பேராசிரியர் .காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் இரா.நற்குணன்,மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தே.காமராஜ், மண்டல இளைஞரணி செயலாளர் சா.ஜெபராஜ் செல்லத்துரை, பெரியார் படிப்பக வாசகர் வட்ட தலைவர் பி.என்.எம்.பெரியசாமி,மாலதி பெரியசாமி ஆகியோர் கலந்து வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment