காடுகளை அழிப்பதை நிறுத்த உறுதியேற்ற நாடுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 6, 2021

காடுகளை அழிப்பதை நிறுத்த உறுதியேற்ற நாடுகள்

உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் 2030 க்குள் காடுகளை அழிப்பதை நிறுத்த சம்மதம் தெரிவித்துள்ளனர்.

COP 26 பருவநிலை மாநாட்டில், அதற்கான உடன்பாட்டில் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அமேசான் மழைக்காடுகள் பெருமளவு அழிக்கப்படும் சூழலில், பிரேசிலும் உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளது.

வெப்ப வாயுவை உறிஞ்சும் தன்மையுள்ள மரங்கள் வெட்டப்படுவதால் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.

காடுகளைப் பாதுகாக்கவும், அவற்றைச் சீரமைக்கவும் கூடுதல் நிதி வழங்க உறுதியளிக்கப்பட்டது.

உலகின் 85 விழுக்காட்டு வனப்பகுதியைப் பாதுகாக்க 100க்கும் மேற்பட்ட நாடுகள் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.

காடுகளை அழிப்பதால் பெறப்படும் பனை எண்ணெய், கோக்கோ போன்ற பொருள்களை உலக வர்த்தகத்திலிருந்து நீக்கவும் 28 நாடுகள் சம்மதித்துள்ளன.

No comments:

Post a Comment