தமிழ்நாட்டில் புதிய வகை கரோனா கண்டறியப்படவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 6, 2021

தமிழ்நாட்டில் புதிய வகை கரோனா கண்டறியப்படவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, நவ. 6 தமிழ்நாட் டில் உருமாறிய டெல்டா வகை வைரஸின் பாதிப்பு இதுவரை கண்டறியப்பட வில்லை என்று அமைச் சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினம் பாக்கத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்பு  செய்தியாளர்க ளுக்கு பேட்டியளித்த அவர், வீடு வீடாக சென்று கரோனா தடுப்பூசி செலுத் தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். மேலும் தடுப்பூசி செலுத்தாதவர் கள் எல்லாம் வீடு தேடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறினார்.

மேலும் அவர் கூறிய தாவது; நவம்பர் மாதத் திற்குள் 100% தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 7 மெகா தடுப்பூசி முகாம் கள் வெற்றியடைந் துள்ளன. 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் பட்டிய லில் 65 லட்சம் பேர் உள் ளனர். அதிகளவில் தாய் மார்களுக்கு தடுப்பூசி செலுத்திய மாநிலம் தமிழ்நாடுதான். தமிழகம் முழுவதும் நவம்பர் 14ம் தேதியன்று 8வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.

தமிழகம் முழுவதும் 50,000 முகாம்களில் தடுப் பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக தீபாவளி விடுமுறைக்கு பின் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தமி ழகத்தில் 2ஆம் தவணை கரோனா தடுப்பூசி செலுத் திக் கொள்ளாதோர் பட் டியலில் 65 லட்சம் பேர் உள்ளனர். தமிழகத்தில் உருமாறிய டெல்டா வகை வைரஸின் பாதிப்பு இதுவரை கண்டறியப் படவில்லை எனவும் அமைச்சர் மா.சுப்ரமணி யன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment