டூம்ஸ்டே கடிகாரம் ஓடத் தொடங்கிவிட்டது: பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 3, 2021

டூம்ஸ்டே கடிகாரம் ஓடத் தொடங்கிவிட்டது: பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை

கிளாஸ்கோ, நவ. 3-  பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டை துவக்கி வைத்து பிரிட் டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உரையாற்றினார். அப்போது, உல கமானது, மனிதனால் உருவாக் கப்பட்ட பேரழிவை முன்கூட்டியே எச்சரிக்கும் டூம்ஸ்டே சாதனத்து டன் பிணைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து வெப்பமடையும் பூமியின் நிலையை, கற்பனையானரகசிய ஏஜென்ட் ஜேம்ஸ் பாண் டுடன்' ஒப்பிட்டு பேசிய போரிஸ் ஜான்சன்,  ஒரு வெடிகுண்டுடன் கட்டப்பட்ட ஜேம்ஸ் பாண்ட், அதை செயலிழக்க வைக்க முயற்சிப் பதாகவும், தற்போது நாமும் தோராயமாக அதே நிலையில் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத் தார்.

இப்போது டூம்ஸ்டே கடிகாரம் ஓடத் தொடங்கியது உண்மைதான், கற்பனையல்ல. நிலக்கரி, எண் ணெய் மற்றும் இயற்கை எரிவா யுவை எரிப்பதால் ஏற்படும் பருவ நிலை மாற்றம் அச்சுறுத்தலாக இருக்கிறது. மேலும் இவை அனைத்தும் கிளாஸ்கோவில் நிலக்கரி மூலம் இயங்கும் ஜேம்ஸ் வாட்டின் நீராவி இயந்திரத்தில் தொடங்கியது. பருவநிலை மாற் றத்தை கட்டுப்படுத்துவதற்கு நட வடிக்கை எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதுஎன்று உலக நாடு களின் தலைவர்களை கேட்டுக் கொண்டார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

No comments:

Post a Comment