மும்பை, நவ. 3- ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற வேண்டுமானால், அனைத்து ஓய்வூ தியதாரர்களும் தங்கள் ஆயுள் சான்றி தழை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் அந்தந்த வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், பொதுத் துறை வங்கியான எஸ்பிஅய், முதியோர்களின் சிர மத்தை புரிந்துகொண்டு, நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப் பதில் புதிய வசதியை அறிமுகப்படுத்தி யுள்ளது.
ஓய்வூதியம் வாங்குபவர்கள் ஆயுள் சான்றிதழை வீட்டில் இருந் தப்படியே காணொலி கால் மூல மாக சமர்ப்பித்து விடலாம். இனி மேல், இதற்காக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
No comments:
Post a Comment