நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. 100 சதவீத வெற்றி பெற வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 5, 2021

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. 100 சதவீத வெற்றி பெற வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, டிச.5 நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 100 சதவீத வெற்றி பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் னிலையில் அ.தி.மு.க. மேனாள் அமைச் சர் பி.பழனியப்பன் தலைமையில் தர்ம புரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 2 ஆயிரம் பேர் நேற்று (4.12.2021) தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

100 சதவீத வெற்றி

தர்மபுரி மாவட்டம் வீக்... வீக்... என்பார்கள். இனிமேல் தர்மபுரி மாவட் டத்தை யாரும் வீக் என்று சொல்லக் கூடாது. இனிமேல் யாரும் அவ்வாறு சொல்லவும் மாட்டார்கள். ஏனென் றால் இன்றைக்கு நிலைமை மாறியிருக்கிறது. எனவே அந்த மாறி இருக் கும் நிலைமையை நீங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

ஏற்கெனவே நடந்து முடிந்த உள் ளாட்சி தேர்தல்களில் தி.மு.க. ஏறக் குறைய 60 முதல் 70 சதவீதம் வரையிலான இடங்களில் வெற்றி பெற்றோம். சமீபத்தில் நடந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட 99 சதவீத இடங்களில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றோம். அதே போல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 99 அல்ல நூறு சதவீத வெற்றிபெற வேண்டும் என்ற உணர்வோடு நீங்கள் எல்லாம் ஒரு உறுதி எடுத்துக்கொண்டு வந்திருக்கிறீர்கள். நிச்சயமாக எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது.

குறை சொல்லாத மக்கள்

மழை பாதிப்புகளின்போது எப்போ தும் ஆட்சியில் இருப்பவர்களை பார்த்துதான் மக்கள் குறை சொல் வார்கள். ஆனால் இதுவரை நான் சுற்றி வந்திருக்கும் எந்த இடங்களிலும் ஒரு குறை கூட சொல்லவில்லை. ‘நீங்கள் வந்துவிட்டீர்கள். எங்களுக்கு நம் பிக்கை இருக்கிறது. நீங்கள் செய்து கொடுப்பீர்கள். அந்த நம்பிக்கை எங் களுக்கு இருக்கிறது’ என்று சொல் கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் 6 மாத காலத்திற்குள்ளாக, 

6 வருடம் இருந்து என்ன செய்ய முடியுமோ அத்தனை காரியங்களையும் நம்முடைய ஆட்சி செய்து இருக்கிறது.

நூற்றுக்கு நூறு சதவீதம் நிச்சயமாக இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி நமக்கு கிடைக்கப் போகிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. எனவே அதற்கு துணைநின்று பணி யாற்ற வந்திருக்கும் உங்கள் அனை வரையும் நான் மீண்டும் ஒருமுறை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் சார் பிலும், தி.மு.க. சார்பிலும் வரவேற் கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment