டிசம்பர் 2 சுயமரியாதை நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 2, 2021

டிசம்பர் 2 சுயமரியாதை நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் நேரில் வாழ்த்து

உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் .பொன்முடி, தோழர் இரா.முத்தரசன், எம்.எச்.ஜவாஹிருல்லா, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று வாழ்த்துரை

சென்னை, டிச. 2- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (2.12.2021) அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர் களின் வழித்தோன்றல் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளை ஆண்டு தோறும் சுயமரியாதை நாளாக கழகத் தோழர்கள் கொண்டாடுவதுடன், பல்வேறு தொண்டறப் பணி களையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

முதலமைச்சர் மு..ஸ்டாலின் நேரில் வாழ்த்து

தமிழர் தலைவரின் 89ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (2.12.2021) காலை அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு..ஸ்டாலின் அவர்கள் நேரில் வந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கி மகிழ்ந்தார்.

அமைச்சர் பெருமக்கள் வாழ்த்து

நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப் பணித் துறை அமைச்சர் ..வேலு, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தமிழர் தலைவரின் வாழ்விணையர் திருமதி மோகனா அம்மையார் உடனிருந்தனர்.

கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு

இதைத் தொடர்ந்து கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் திடலுக்கு வருகை தந்தபோது மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த கழகத் தோழர்கள் ஒலி முழக்கங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிறந்த நாள் விழா

இதைத் தொடர்ந்து நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்த நாள் விழா மேடையில் தமிழர் தலைவரை தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த கழகப் பொறுப்பாளர் கள், கழகத் தோழர்கள், அனைத்துக் கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிடுதலை' இதழுக்கான சந்தாக்களை வழங்கி மகிழ்ந்தனர். விழா மேடையில்விடுதலை' பணிமனைத் தோழர்கள் மற்றும் பல்வேறு கட்சி, இயக்கங்களின் தோழர்கள் தமிழர் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

.வெ.கி.. இளங்கோவன் வாழ்த்து

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலை வரும், மேனாள் ஒன்றிய இணை அமைச்சருமான .வெ.கி..இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா, மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, மதிமுக அமைப்பு செயலாளர் ஆவந்தியதேவன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மேனாள் மாவட்ட நீதிபதி இரா.பரஞ்சோதி, மேனாள் சட்டப்பேரவைச் செயலாளர் மா.செல்வராஜ், மேனாள் அரசு வழக்குரைஞர் குணராஜ், தொழிலா ளர் நலத்துறை உதவி ஆணையர் தங்கவேல், பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் .பரந்தாமன், வட்ட திமுக செயலாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, தேவநிதி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுச் செயலாளர் அபுபக்கர், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் ஜெ.எம்.ஆரூண், சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, இயக்குநர் நடிகர் போஸ் வெங்கட் ஆகியோர் தமிழர் தலைவருக்குப் பொன்னாடையும், நூல்களையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், பொருளாளர் வீ.குமரேசன், மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி, வழக்குரைஞரணி தலைவர் .வீர சேகரன், கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் .அருள்மொழி, துணைப் பொதுச் செயலாளர் .இன்பக்கனி மற்றும் மாநில, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்று தமிழர் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நூல்கள் வெளியீட்டு விழா

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் எழுச்சியுடன்  சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் இன்று (2.12.2021) காலை நடைபெற்றன.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. கழகப் பொருளாளர் வீ.குமரேசன் வரவேற்புரை ஆற்றினார். கழக வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி நோக்க உரையாற்றினார்.  கழகத்துணைத் தலைவர்  கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்து உரை ஆற்றினார்.

தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆங்கில மாத இதழின் ஆண்டு மலர் ‘The Modern Rationalist Annual Number 2021’  இதழை திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் ஆங்கில மொழியாக்க நூல்  ‘Worthy Living Why and How?-Asiriyar Dr.K.Veeramani’  நூலை மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட கழக அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் பெற்றுக் கொண்டார்.

வாழ்வியல் சிந்தனைகள் (தொகுதி 16) நூலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம் பெற்றுக்கொண்டார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரைகளின் ஆங்கில மொழியாக்க தொகுப்பு நூல் 'Carry the Torch forward-Asiriyar Dr.K.Veeamani' நூலை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் .பொன்முடி வெளியிட பெரியார் புத்தக நிலைய மேலாளர் ..நடராசன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று நூல்களை வெளியிட்ட தலைவர்களின் வாழ்த்துரை யைத் தொடர்ந்து விழா நிறைவாக கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஏற்புரை ஆற்றினார். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.

துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் .இன்பக்கனி நன்றி கூறினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய நூல்களின் நன்கொடை மதிப்பு ரூ.770. விழாவில் ரூ.270 தள்ளுபடியுடன் ரூ.500க்கு வழங்கப்பட்டது.

தமிழர் தலைவருக்கு வாழ்த்து கூற வரிசையில் சென்ற தோழர்கள் புத்தகங்களை பெருமகிழ்வுடன் வாங்கிச்சென்றனர். தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் பரிசாக விடுதலை சந்தாக்கள் அளிக்கப்பட்டன.

கரோனா கால கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு விழா சிறப்புற நடைபெற்றது.

No comments:

Post a Comment