துபாய், டிச. 4- பன்னாட்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் கூறியிருப்பதாவது:-
உலகில் உள்ள 57 நகரங்களில் வெளிநாட்டினர் சிறப்பான முறையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும், வேலை செய்யவும் சிறந்த நகரம் எது? என்பது குறித்த புள்ளி விவரம் சேகரிக்கப்பட்டது. இதில் பொது மக்கள் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். மொத்தம் 12 ஆயி ரத்து 420 பேரிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள் ளது. இதன் அடிப்படையில் துபாய் நகரம் 3ஆ-வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு 20-ஆவது இடத்தை துபாய் நகரம் பெற்றி ருந்தது.
இந்த ஆண்டு 3-ஆவது இடத் துக்கு முன்னேறியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முக் கியமான காரணமாக பொதுமக் கள் கூறுவது துபாய் நகரம் வெளி நாட்டில் இருந்து வருபவர்கள் மிகவும் எளிதில் தங்களது வேலை யையும், இருப்பிடத்தையும் அமைத் துக் கொள்ள உதவியாக இருக் கிறது. மேலும் அரபி மொழி உள் ளிட்ட உள்ளூர் மொழிகளை பேசக் கூடிய கட்டாயம் எதுவும் இல்லா மல் தங்களுக்கு தெரிந்த மொழி களை வைத்தே பணிகளை மேற் கொள்ள முடியும்.
இங்கு 190 நாடுகளைச் சேர்ந் தவர்கள் இருப்பதால் மிகவும் எளி தில் வெளிநாட்டைச் சேர்ந்தவர் களை நண்பர்களாக்கி கொள்ள முடிகிறது. அரசியல் நிலைத்தன்மை, பாதுகாப்பு உள்ளிட்டவையும் துபாய் நகரம் வெளிநாட்டினர் வாழ்வதற்கு ஏற்ற நகரம் என்ற பெருமையை பெறுகிறது என்று தெரிவித்தனர். இதேபோல் அபுதாபி நகரம் 16-ஆவது இடத்தை பெற்றுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment