கடலோரக் காவல்படையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: நேவிக் (ஜெனரல் டியூட்டி 260, டொமஸ்டிக் பிராஞ்ச் 35) , யான்ட்ரிக் (மெக்கானிக்கல் 13, எலக்ட்ரிக்கல் 9, எலக்ட்ரானிக்ஸ் 5) என மொத்தம் 322 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: நேவிக் ஜெனரல் டியூட்டி பிரிவுக்கு பிளஸ் 2, டொமஸ்டிக் பிராஞ்ச் பிரிவுக்கு பத்தாம் வகுப்பு, யான்ட்ரிக் பிரிவுக்கு பிளஸ் 2, டிப்ளமோ (பொறியியல்) முடித்திருக்க வேண்டும்.
வயது : 18 - 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உயரம் : குறைந்தது 157 செ.மீ., இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் பரிசோதனை தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : 4.1.2022 முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 250. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 14.1.2022
விபரங்களுக்கு: https://joinindiancoastguard.cdac.in
விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் 641 காலியிடங்கள்
இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
காலியிடம்: டெக்னீசியன் பிரிவில் 641 இடம் உள்ளது.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 10.1.2022 அடிப்படையில் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: இணையவழி எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மய்யம்: சென்னை, வேலூர், கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி.
விண்ணப்பிக்கும் முறை : இணையவழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ.1000. பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு ரூ. 300.
கடைசிநாள் : 10.1.2022
விவரங்களுக்கு: www.iari.res.in
ஜிப்மரில் பணி வாய்ப்பு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: மருத்துவ ஆய்வக டெக்னாலஜிஸ்ட் 12, ஜூனியர் அட்மினிஸ்ரேட்டிவ் அசிஸ்டென்ட் 8 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : மருத்துவ ஆய்வக டெக்னாலஜிஸ்ட் பணிக்கு மருத்துவ ஆய்வக அறிவியலில் டிகிரி, அசிஸ்டென்ட் பதவிக்கு பிளஸ் 2, நிமிடத்துக்கு 35 ஆங்கில வார்த்தை டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
வயது : 5.1.2022 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: இணையத்தில் எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு. தேர்வு தேதி: 23.1.2022
விண்ணப்பிக்கும் முறை: இணையவழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ.1500. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 5.1.2022 மாலை 4:30 மணி. விபரங்களுக்கு: https://jipmer.edu.in/announcement
No comments:
Post a Comment