திருச்சி, டிச.29 இந்திய மருந்தியல் கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் இணைந்து 27.12.2021 அன்று நடத்திய 60ஆவது தேசிய மருந்தியல் வாரவிழா நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதுநிலை மருந்தியல் மாணவர் மா. சிவகணேஷ் அவர்கள் 2021 - 2022ஆம் ஆண்டின் தமது முதுநிலை மருந்தியல் ஆய்விற்காக சென்னை தமிழ்நாடு மருந்தியல் நல அறக்கட்டளையின் ஜி. ரெங்காச்சாரி நினைவு விருதினையும் மூன்றாம் பரிசாக ரூபாய் 8,000/- பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழினை இந்திய மருந்தியல் கழகத்தின் மேனாள் தலைவர் பேரா. முனைவர்
பி. சுரேஷிடமிருந்து பெற்றார்.
தமிழ்நாடு மருந்தியல் நல அறக்கட்டளைத் தலைவர் எஸ்.வி.வீரமணி உடனிருந்தார். விருது பெற்ற மாணவரை கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment