அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல்

 டிரம்ப் ஆதரவாளருக்கு 33 மாதம் சிறை

வாசிங்டன், டிச. 4- அமெரிக்கா வின் நியூ ஹேம்ப்ஷயர் மாகாணத்தை சேர்ந்தவர் ரைடர் வினீகர் (வயது 34). இவர் மேனாள் அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளர் என தெரிகி றது. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அமெ ரிக்க அதிபராக இருந்த டிரம்புக்கு ஆதரவு தெரிவித்து அவர் பின்னால் நிற்காவிட்டால் உங் களை தூக்கில் தொங்க விட்டு விடுவேன் என்று அந்த நாட்டின் 6 நாடா ளுமன்ற உறுப்பினர்க ளுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுதொடர்பாக அவர் பேசி அதைப் பதிவு செய்து அந்த நாடாளு மன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களில் கொண்டு போய் போட்டு விட்டார்.

இதுதொடர்பான புகாரின் பேரில் அமெ ரிக்க கேபிட்டல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, வினீகரிடம் விசா ரணை நடத்துவதற்காக அவர் வீடு தேடிச்சென்ற னர். ஆனால் அவர்களி டம் வினீகர் பேச மறுத்து விட்டார். அத்துடன் அவர் மறுநாளே குடும் பத்துடன் பிரேசிலுக்கு சிட்டாய் பறந்து விட்டார். ஆனால் அடுத்த மாதமே அவர் நாடு திரும்பிய போது காவல்துறையின ரிடம் அகப்பட்டுக் கொண் டார்.  அவர் கைது செய் யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை அங் குள்ள நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 6ஆம் தேதி நடந்தது.

விசாரணையின் போது அவர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார். இதைய டுத்து அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற் போது அவருக்கு 33 மாதங் கள் சிறைத் தண்டனை விதித்தும், 15 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.11 லட் சம்) அபராதம் விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பு அளித் தது. இதையடுத்து அவர் அமெரிக்க மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment