பினாங்கு,டிச.28 மலேசிய திராவிடர் கழகம் பினாங்கு மாநில ஏற்பாட்டில், 24.12.2021 அன்று இரவு 7 மணிக்கு, பினாங்கு மாநிலப் பணிமனையில், தந்தை பெரியார் 48 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு, மலேசிய திராவிடர் கழகத் தேசியத்தலைவர் ச.த.அண்ணாமலை அவர்கள் தலைமையில், பினாங்கு மாநிலப் பொருளாளர் செ.குணாளன், பட்டர்வொர்த் கிளைச்செயலாளர் இரா.ப.தங்கமணி மற்றும் சிறப்பு விருந்தினராக தமிழ் நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் திருமாவளவன் கலந்து தந்தை பெரியாரின் அரிய கருத்துகளை முன் வைத்தும், மேற்கோள் காட்டியும் பல நல்ல செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.
மேலும் செலாமா திருமதி. வேணி, அ. பாண்டியன் மற்றும் மாக்மண்டின், பட்டர்வொர்த், செபராங் செயா, பண்டாராயா, நிபோங் தெபால், பாகான் அசாம், தாமான் மெஸ்ரா கிளைகளின் கழகத் தோழர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
தகவல்: இரா. யோகேஷ்வரி, ம.தி.க பினாங்கு மாநிலச் செயலாளர்.
No comments:
Post a Comment