சென்னை, ஜன.27 தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி களுக்கு பிப்ரவரி 19ஆம்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை வெளியிடுவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார், சென்னை கோயம் பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேற்று (26.1.2022) மாலை 6.30 மணியளவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என தமிழ்நாட்டில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், வார்டு கள் மறுவரையறை செய்யப்பட்டவாறு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொண்டுள்ளது.
வார்டு மறுவரையறை செய்யப்பட்ட அறிவிப்பை அடிப்படையாக கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வாக்குச்சாவடி பட்டியல்கள் 9.11.2021 மற்றும் 4.1.2022 அன்றும், வாக்காளர் பட்டியல்கள் 9.12.2021 மற்றும் 10.1.22 அன்றும் வெளியிடப்பட்டன.
வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை
அதனைத்தொடர்ந்து தேர்தல் அறிவிப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வருகிற 28ஆம் தேதி வெளியிடும். வேட்புமனு தாக்கல் 28ஆம் தேதியன்றே (நாளை) தொடங்கும். வேட்புமனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தரப்படும். வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கும். கரோனா தொடர்பான நிலையான செயல்முறைகளை பின்பற்றி, சமூக இடைவெளி மற்றும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சுதந் திரமாகவும், நேர்மையாகவும் நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொண்டுள்ளது.
தேர்தல் அட்டவணை விவரம் வருமாறு:-
பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல்
வேட்புமனு தாக்கல் தொடக்கம் - ஜனவரி 28ஆம் தேதி. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள் - பிப்ரவரி 4ஆம் தேதி. வேட்புமனுக்கள் ஆய்வு செய்தல் - பிப்ரவரி 5ஆம் தேதி. வேட்புமனு திரும்ப பெறுதல் - பிப்ரவரி 7ஆம் தேதி. வாக்குப் பதிவு - பிப்ரவரி 19ஆம் தேதி. வாக்கு எண்ணிக்கை - பிப்ரவரி 22ஆம் தேதி. தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும் நாள் - பிப்ரவரி 24ஆம் தேதி. தேர்ந்தெ டுக்கப்படும் வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு நாள் - மார்ச் 2ஆம் தேதி. மறைமுக தேர்தல் மூலம் மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர், நகராட்சி-பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான கூட்ட நாள் - மார்ச் 4ஆம் தேதி.
வேட்புமனு தாக்கல் செய்தல், வேட்பு மனுக்களை ஆய்வு செய்தல், திரும்பப் பெறுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆகியவற்றை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்திட இந்த ஆணையத்தால் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகள்
21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 1,374 வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களும், 138 நகராட்சிகளுக்கு உட்பட்ட 3,843 வார்டு உறுப்பினர்களும், 490 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 7,621 வார்டு உறுப்பினர்களும் என மொத்தம் 12 ஆயிரத்து 838 நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மாநகராட்சி மன்ற உறுப் பினர், நகராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய அனைத்து பதவியிடங்களுக்கான தேர் தல் கட்சி அடிப்படையில் நடைபெறும்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மற்றும் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து இயக்ககம் ஆகியவற்றுடன் உள் ளாட்சி தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை 10.12.2021 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தற் போது கூடுதல் வழிகாட்டு நெறிமுறை களும் வெளியிடப்பட்டுள்ளன.
31,029 வாக்குச்சாவடிகள்
தேர்தல் நடைபெற உள்ள மாநக ராட்சிகளில் 15,158 வாக்குச்சாவடிகளும், நகராட்சிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சிகளில் 8,454 வாக்குசாவடி களும் என மொத்தம் 31,029 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். சென்னை மாநகராட்சியில் மட்டும் 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள் ளன.
No comments:
Post a Comment