சென்னை, ஜன.30 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம்தேதி நடக்க வுள்ள நிலையில் 32 அய்.ஏ.எஸ். அதி காரிகள் உள்பட 52 தேர்தல் பார்வை யாளர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம்தேதி நடைபெற உள்ளது.
வேட்பு மனு தாக்கல்
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 28.1.2022 அன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
பிரதான கட்சிகள் இன்னமும் கூட் டணி கட்சிகளுடன் வார்டு பங்கீட்டை நிறைவு செய்யாததால் வேட்பு மனு தாக்கல் இன்னமும் விறுவிறுப்பு அடைய வில்லை.
இதற்கிடையே தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மய்யங்களை மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக பார்வையிட்டு தேர்தல் ஏற்பாடுகளை முடுக்கவிட்டு வரு கிறார்கள். தேர்தல் பறக்கும் படையினர் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பொருட்களையும், பணத்தையும் கைப்பற்றி வருகிறார்கள்.
இதுதவிர தேர்தல் பார்வையாளர் களையும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது.
இந்த நிலையில் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணை யில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தேர்தல் பணி
தமிழ்நாட்டில் நடக்க இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 49 அய்.ஏ.எஸ். அதிகாரிகளை பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு அரசு அனுமதி அளித்து உத்தரவிடுகிறது.
கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் நடக்க இருக்கிற சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக 60 அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்காக தயார் செய்யப்பட்ட 49 அய்.ஏ.எஸ். அதிகாரி களை கொண்ட பட்டியலில், 36 பேர் இந்திய தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் காணப்படுகின்றனர்.
எனவே மீதமுள்ள 13 அய்.ஏ.எஸ். அதிகாரிகளை நகர்ப்புறஉள்ளாட்சித் தேர்தலுக்கான பார்வையாளர்களாக பயன்படுத்த முடியும்.
தேர்தல் பார்வையாளர்
அவர்கள் தவிர மேலும் 19 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் 20 மாவட்ட வருவாய் அலுவலர்கள் (டி.ஆர்.ஓ.) ஆகியோரை மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
அதன்படி சி.என்.மகேஸ்வரன், வி.தட்சிணாமூர்த்தி, எம்.லட்சுமி, அஜய் யாதவ் (இளையவர்), எல்.நிர்மல்ராஜ், எம்.கோவிந்த ராவ், ஏ.ஜான் லூயிஸ், மகேஸ்வரி ரவிக்குமார், டி.ரத்னா, ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், எஸ்.வளர்மதி, எம்.பிரதீர்குமார், கே.கற்பகம் ஆகிய 13 பேரை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கலாம்.
வருவாய் அலுவலர்கள்
மேலும், அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பி.பிரியங்கா, எஸ்.அருண்ராஜ், கே.சாந்தி, எம்.எஸ்.சங்கீதா, பி.கணேசன், ஆர்.பிருந்தா தேவி, வந்தனா கார்க், ஜே.இ. பத்மஜா, ஆனந்த் மோகன், நிஷாந்த் கிருஷ்ணா, வி.சிவகிருஷ்ணமூர்த்தி, எஸ்.பாலச்சந்தர், ஆர்.வைத்தியநாதன், எம்.பிரதாப், கே.ஜே.பிரவீன்குமார், எல்.மதுபாலன், எம்.என்.பூங்கொடி, எம்.தங்கவேல், ஏ.சங்கர் ஆகிய 19 பேரையும், வி.ஆர்.சுபலட்சுமி, பி.ரத்ன சாமி, ஆர்.சதீஷ், எஸ்.கவிதா, ஆர்.ரேவதி, ஆர்.பிரியா, எம்.இந்துமதி, என்.காளிதாஸ், எஸ்.சாந்தி, எஸ்.முத்துமாரி, சி.ஜெயசிறீ, வி.மீனாட்சி சுந்தரம், வி.மங்களம், வி.ரவிச்சந்திரன், எஸ்.ஜானகி, பி.வி.சரவணன், சி.ராஜேந்திரன், ஜி.சரவணமூர்த்தி, ஜி.சிவருத்ரயா, ஆர்.சக்தி வேல் ஆகிய 20 மாவட்ட வருவாய் அதிகாரிகளையும் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment