புதுடில்லி, ஜன.28 வருங்கால வைப்புநிதியில் கடந்த 4 ஆண்டுகளில் 5 கோடி புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர்.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம்வரை 4 கோடியே 88 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர். இந்த தகவலை தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அமைப்பு ரீதியான தொழில் துறைகளில் வேலைவாய்ப்பு பெருகி இருப்பதை இந்த தகவல் உணர்த்துவதாக கூறியுள்ளது. இதே காலகட்டத்தில், இ.எஸ்.அய். எனப்படும் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு திட்டத்தில் 5 கோடியே 93 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்ந்ததாகவும் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment