பெரியார் கேட்கும் கேள்வி! (560) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 5, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (560)

இருக்கின்ற நிலைமையிலிருந்து மாற்றம் செய் வதையே சீர்திருத்தம் என்றும், நாகரிகமென்றும் சொல்லு கிறோம் என்றாலும், இந்தச் சீர்திருத்தமும், நாகரிகமும் வெறும் மாறுதலுக்காகவே ஏற்படுவதும் உண்டல்லவா? மற்றும் பல விசயங்களில் சவுகரியத்தையும், நன்மை யையும், அவசியத்தையும், பகுத்தறிவையும் உத்தேசித்து மாற்றப்படுவதும் உண்டல்லவா? மாறுதலும், சீர்திருத்த மும் மக்களுக்கும், உலகத்துக்கும் புதிதல்ல என்பதோடு மாறுதல் என்பதும் இயற்கையேயல்லவா?

மாறுதல் இல்லாமல் எந்த நாடும், எந்தச் சமூகமும், எந்த வஸ்துவும் இருக்க முடியுமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment