காட்டுத் தீ உருவாக, காடுகளின் ஊடாகச் செல்லும் மின் கம்பங்களும் காரணமாக இருக்கின்றன இதைத் தடுக்க, தரையடி மின் வடங்களைப் போட பல அரசுகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கு உதவியாக, அமெரிக்காவில், 'பெட்ரா' என்ற நிறுவனம், 'ஸ்விப்டி' என்ற சுரங்கம் தோண்டும் ரோபோவை வடிவமைத்திருக்கிறது.இது பாதி தானாக இயங்கும் புத்திசாலித்தனம் கொண்டது. அதைவிட முக்கியமாக, மிகவும் கடினமான நிலத்தடிப் பாறைகளை, தொடாமல், வெறும் வெப்பத்தாலேயே உருக்கிவிடும் திறன் கொண்டது ஸ்விப்டி. இதற்கென அதிக சூடேற்றப்பட்ட வாயுவைப் பயன்படுத்துகிறது. இதனால், சுரங்கம் தோண்டும் ட்ரில்லிங் இயந்திரங்களைப்போல ஸ்விப்டியிற்கு தேய்மானம் அதிகம் இருக்காது. பராமரிப்பும் குறைவு என பெட்ராவின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலிருந்தபடி மனிதர்கள் இயக்க, காடுகளில் இந்த ரோபோ, மின் கம்பிகளுக்கான தரையடி சுரங்கங்களை விரைவாக தோண்டித் தந்துவிடும்.
அதுமட்டுமல்ல, உலகெங்கும் தரைக்கடியில் சுரங்கம் தோண்டும் தொழில் வேகமெடுக்கப்போகிறது. பல வளரும் நாடுகள் நகர வாகனப் பெருக்கத்தைக் குறைக்க மெட்ரோ ரயில்கள் அமைக்கின்றன. எலான் மஸ்கின் ஹைப்பர்லூப் போன்ற தரையடி விரைவுப் போக்குவரத்துத் திட்டங்கள் பல வரவிருக்கின்றன. அவற்றுக்கு பெட்ராவின் ஸ்விப்டி போன்ற கருவிகள் தேவைப்படும்.
No comments:
Post a Comment