மாநிலத்திற்கான வேட்பாளர் தேர்தல் செலவு உச்சவரம்பு உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

மாநிலத்திற்கான வேட்பாளர் தேர்தல் செலவு உச்சவரம்பு உயர்வு

புதுடில்லி, ஜன.7 தேர்தல்களில் வேட்பாளர்களின் செலவு உச்ச வரம்பை உயர்த்தி தேர்தல் ஆணை யம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் தேர்தல் செலவு களுக்கான உச்சவரம்பை நிர்ணயம் செய்தது.  பிறகு 2018 ஆம் ஆண்டில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கு மட்டும் செலவு உச்சவரம்பு அதி கரிக்கப்பட்டது.   இந்த செலவு உச்சவரம்பு அந்தந்த தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து தீர்மானம் செய்யப் படுகிறது.

பல மாநிலங்களில் வாக்கா ளர்கள் எண்ணிக்கை உயர்ந் துள்ளது.   மேலும் செலவினங்களும் அதிகரித்து வருகிறது. 

எனவே இந்த தேர்தல் செலவு உச்சவரம்பை அதிகரிக்க கோரிக் கைகள் எழுந் தன.  

இதையொட்டி சென்ற ஆண்டு அக்டோபரில் ஒரு குழு அமைக்கப் பட்டு அனைத்துக் கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தேர்தல் செலவை 10 சதவிகிதம் அதிகரிக்கஅனுமதிக்கப்

பட்டது.

இது குறித்து கருத்துக்களைத் தெரிவிக்குமாறு தேர்தல் ஆணை யம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி களுக்குக் கோரிக்கை விடுத்தது.   அரசியல் கட்சிகளின் கருத்துக்கு இணங்க தற்போது தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கான உச்ச வரம்பை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நாடா ளுமன்றத் தேர்தலில் தற்போது ரூ.70 லட்சமாக உள்ள தொகுதி களில் தேர்தல் செலவு உச்சவரம்பு ரூ.95 லட்சமாக உயர்த்தப்பட் டுள்ளது.  இதைப் போல் ரூ.55 லட்சமாக இருந்த உச்சவரம்பு ரூ. 75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவை தேர்தல்களில் ரூ.28 லட்சமாக இருந்த தொகுதி களில் உச்சவரம்பு ரூ.40 லட்சமாக வும் ரூ.20 லட்சமாக இருந்த உச்ச வரம்பு ரூ.28 லட்சமாகவும் உயர்த்தப்படுகிறது.

No comments:

Post a Comment