ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஜன.29 அரசு பேருந்துகளில் மாற்றுத்திற னாளிகள் பயணிக்கும்போது அவர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் ஏளனமாகவோ, இழி வாகவோ நடத்தக் கூடாது என்று ஓட்டுநர், நடத்துநர் களுக்கு அரசு உத்தரவிட்டுள் ளது.
இதுகுறித்து அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் களுக்கும் போக்குவரத்துக் கழகங்களின் முதன்மைச் செயலாளர் மற்றும் தலைவர் கே.கோபால் அனுப்பிய சுற்றறிக் கையில் கூறப்பட்டு இருப்பதா வது:-
பேருந்துகளில் மாற்றுத்திற னாளிகள் பயணிக்கும்போது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பின்பற்ற வேண்டிய விதி முறைகள் குறித்து இந்த அறிவுரை வழங்கப்படுகிறது.
அதன்படி, பேருந்து நிறுத் தங்களில் பேருந்திற்காக மாற்றுத்திறனாளி பயணிகள் நிற்கும்போது, முறையாக பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு மாற்றுத்திறனாளி பயணி நின்றாலும் அவரை பேருந்தில் ஏற்றிச்செல்ல வேண்டும்.
பேருந்து நிற்பதற்காக குறிக் கப்பட்ட இடத்தில் பேருந்தை நிறுத்த வேண்டும். அதற்கு முன்போ அல்லது அதைத் தாண்டி யோ பேருந்துசை நிறுத்தி அவர் களுக்கு இடையூறு செய்யக் கூடாது.
பேருந்தில் ஏறும் மாற்றுத் திறனாளியை, பேருந்தில் இட மில்லை என்று கூறி அவரை இறக்கிவிடக் கூடாது. மாற்றுத் திறனாளி இருக்கையில் வேறு யாராவது அமர்ந்திருந்தால் அவர்களை எழுப்பி மாற்றுத் திறனாளியை அமரச் செய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளி பயணி களிடம் எரிச்சலூட்டும் வகை யில் கோபமாகவோ, ஏளன மாகவோ, இழிவாகவோ பேசக் கூடாது. அவர்களை உபசரிப்புடனும் அன்புடனும் நடத்த வேண்டும். அவர்கள் ஏறும் போதும், இறங்கும்போதும் கண்காணித்து, ஒட்டுநருக்கு சமிக்ஞை செய்து பாதுகாப்பாக ஏற்றி, இறக்கிவிட வேண்டும்.
மாற்றுத்திறனாளி களுக் கான அசல் தேசிய அடையாள அட்டையைக் கொண்டு, 40 சதவீதத்திற்கு மேல் மாற்றுத் திறன் கொண்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர் களின் துணையாளர் ஒருவரு டன் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் கட்டணமில் லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் 2 பேருக்கும் உரிய இலவச பயணச்சீட்டை நடத்துநர் வழங்க வேண்டும்.
அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் பேருந்து களில் பயண எண்ணிக்கை உச்ச வரம்பின்றி 75 சதவீத பயணக் கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment