இந்திய துணை ராணுவப்படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப் படை பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: ஆண்களுக்கான பிரிவில் குக் 879, வாட்டர் கேரியர் 510, ஸ்வீப்பர் 617, வாஷர்மேன் 338, பார்பர் 123, காப்லர் 88 உட்பட 2651 இடங்கள், பெண்கள் பிரிவில் குக் 47, வாட்டர் கேரியர் 27, ஸ்வீப்பர் 33, வாஷர்மேன் 18 உட்பட 137 இடங்கள் என மொத்தம் 2788 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
வயது: 1.10.2021 அடிப்படையில் 18 -23 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : உடல்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத்தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி
கடைசிநாள் : 28.2.2022
விவரங்களுக்கு: https://rectt.bsf.gov.in/#bsf-current-openings
No comments:
Post a Comment