உலகம் முழுவதும் சமமான முறை யில் தடுப்பூசிகளை விநியோகம் செய் தால் நோய்ப்பரவல் இவ்வாண்டுக்குள் முடிவுக்கு வரும் என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலக மக்களில் 70 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அனைத்துலக இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. அதை இவ்வாண்டு ஜூன் மாதத்திற்குள் அடைய அனைத்து நாடுகளும் ஒன்றாகப் பணியாற்ற வேண்டும் என்று திரு.கெப்ரியேசஸ் வலியுறுத்தினார்.
இருப்பினும் போதுமான தடுப்பூசி களைப் பெற முடியாமல் வளரும் நாடுகள் பின்தங்கியிருப்பதை அவர் சுட்டினார்.
தடுப்பூசிகளின் மதிநுட்பச் சொத் தைக் கையாளும் விதிமுறைகளும் காப் புரிமை நிர்வாக முறையும் மாறவேண் டும் என்று சில வல்லுநர்கள் கூறுகின்ற னர்.
அப்போதுதான் இன்னும் கூடுத லான நாடுகள் தடுப்பூசிகளைச் சொந்த மாகவே தயாரிக்க அந்தத் தகவல்களைப் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment