கலைஞர் தொடங்கினார் - தனயன் ஸ்டாலின் தொடர்கிறார்
முனைவர் பேராசிரியர்
ந.க.மங்களமுருகேசன்
தமிழ்நாடு அரசின் சமூகப் புரட்சி திட்டங்கள் பலப்பல. அவற்றில் ஒன்றுதான் “நமக்கு நாமே” எனும் சமூகப் புரட்சி புதுமைத் திட்டம். இந்திய மண்ணில் எந்த மாநிலத்திலும் இல்லாத புதுமையான முன்னோடி திட்டம் இத்திட்டம். முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தொடங் கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடரும் திட்டம்.
பலருக்கும் நமக்கு நாமே திட்டம் என்பதை விளக் கிடுவோம், எடுத்துக் கூறுவோம். இதன் நோக்கம் மற்றும் சிறப்பு பயன்களை எடுத்துக் கூறுவோம்.
1997-1998இல் தலைவர் கலைஞர் தலைமையில் அமைந்த திமுக அரசு அறிமுகம் செய்வித்த நமக்கு நாமே எனும் திட்டம் - தனக்குத் தானே உதவி. ஒருவருக் கொருவர் உதவி எனும் அடிப்படைக் கருத்தில் எழுந்தது.
கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் சமூக பொருளாதார மேம்பாட்டினை விரைவுபடுத்தும் திட்டம். இதனுடைய குறிப்பிடத்தக்க நோக்கம் உள்ளூர் திட்டமிடுதல், செயலாக்கம் ஆகியவற்றில் தொடர்ந்த, நிலைத்த முறையில் மக்களின் பங்களிப்பை அடிப்படை யாகக் கொண்டது. “நமக்கு நாமே” திட்டத்தின் அடிப் படைத் தத்துவம், அடிமட்டத்தில் வளர்ச்சி. நம்மிடம் தோன்றி. நம்மால் அமைந்தது. நம்மால் நிறைவேற்றுவது என்பதால் தமிழ்நாடு அரசு பொதுமக்கள் எல்லாவற்றிக் கும் அரசியல் சார்ந்து இருப்பதற்குப் பதிலாக, மக்கள் தமக்குள்ளே உதவித் தங்கள் தேவையை தாங்களே நிறைவேற்றிக்கொள்ள அரசு ஊக்குவிக்கும் திட்டம்.
இத்திட்டத்தின்கீழ் தங்கள் தேவை என்று உணரு பவற்றை முன்னுரிமை அடிப்படையில் பங்கேற்புத் திட்டம் வாயிலாக தாங்களே திட்டமிட்டு நிறை வேற்றும் திட்டம். பண்டைய நாளில் நம் தமிழ் மண்ணில் இருந்த ‘குடி மராமத்து’ என்னும் திட்டம் புதுப்பிக்கப் பெறுகிறது எனக் கூறலாம்.
நடவடிக்கைகளை அரசு எடுத்திடலுக்கு பதிலாக மக்களே,
1) நடவடிக்கைகளை கண்டறிய
2) அத்தகைய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்திட
3) நிதித் தேவைகளை மதிப்பிட
4) தங்கள் பங்களிப்பை அளித்திட
5) சமூகப் பங்களிப்புக் கோட்பாட்டை நிலைநிறுத்த அதன் செயலிலும் நிர்வாகத்திலும் பங்கேற்பது,
ஆகியவற்றை ஊக்குவிப்பது இந்த மொத்த திட்டத் திலும் அரசு கிரியா ஊக்கியாகச் செயல்படும்.
திட்டத்தின் வரையறை
அ) நமக்கு நாமே திட்டம் அனைத்து பகுதிகளிலும் நகர்ப்புறம், கிராமப்புறம் அனைத்திற்கும் பொருந்தும். இதன் அடிப்படைக் கொள்கை, பொதுமக்கள் நடைபெற வேண்டிய நடவடிக்கையை கண்டறிந்து பங்களித்து தங்களை அதில் ஈடுபடுத்திக் கொள்வது.
ஆ) பொதுமக்களின் தேவைகள் இடத்திற்கு இடம் வேறுபடும், எனவே ஒன்றே போலான திட்டமிடல் செயலைத் தேர்வு செய்வதில் உறுதி, ஒன்றாக இராது, நிறைவேற்றவேண்டிய திட்டம் எது என்பதை அடிப் படையில் தேர்வு செய்வோர் அப்பகுதி மக்களே.
இ) நமக்கு நாமே திட்டத்தினை சமூகத்தில் பரப்பிட அரசு சிறப்பு நிதிகள் ஒதுக்கீடு செய்த போதும், இந்தக் கோட்பாட்டினை பிறத்துறை திட்டங்களுக்கும் விரிவுபடுத்த இயலுமாதலால் அது அரசு தல வளங் களைத் திரட்டுவதன் வாயிலாக அரசின் ஒதுக்கீட்டின் பயனை அதிகமாக்கிட இயலும்.
ஈ) தேர்வான நடவடிக்கை நிதி ஒதுக்கீடு தொடர்பான நடவடிக்கையாக சிறந்த வளத்தை உருவாக்குமாறு அமைய வேண்டுவதில்லை. நிதி தொடர்பான தேவை களான நலம், தூய்மைப் பணி, கல்லாமை நீக்கம், இலவச மருத்துவப் பரிசோதனை, கிராமச் சுற்றுப்புற முன்னேற் றங்களான தூய்மைப் பணி, வலுக்குன்றிய பிரிவினருக்கு விழிப்புணர்வு ஆகியவைகளும் மேற்கொள்ளலாம்.
எ) தல சுய ஆட்சி நிறுவனங்களுக்கு ஊழியப் பணி களுக்கு என நடவடிக்கைகளைச் சுருக்கி சொன்னது, எந்தத்துறை என்று இல்லாத எந்த நடவடிக்கைகளையும் அத்துறைகளின் ஒப்புதலோடு நமக்கு நாமே இத்திட்டத் தின்கீழ் நிறைவேற்றலாம்.
ஏ) கீழ்க்கண்ட எடுத்துக்காட்டுகளான நடவடிக் கைகள் விரிவானவையன்று
1) கட்டடங்கள், சோதனைக் கூடங்கள், கழிப்பறைகள், பள்ளிகளுக்குக் கட்டுவது, மருத்துவமனைகளும், நூலக கட்டடங்களும் கட்டுவது, மாணவர் விடுதிகள், மதிய உணவு மய்யங்கள், தொலைக்காட்சிப் பெட்டி அறைகள், உணவுப் பங்கீடு கடைகள் அல்லது அது போன்ற கிரா மங்களில் மேற்கொள்ளப் பெறும் குடிதண்ணீர் வசதிகள் உள்ளிட்ட வெள்ளையடித்தல் வாயிலாக எல்லாச் சமூகச் சொத்துக்களையும் நிருவகிப்பது ஆகியனவாகும்.
2) சிறு பாசன பணிகளான குளங்கள், கால்வாய்கள், குட்டைகள், ஊருணிகள், மதகுகள் அமைத்தல், சுவர்கள், கழிவுநீர்க்காய்வாய்கள், தடுப்பணைகள் அமைத்தல் உருவாக்கலும்,
3) பாலங்கள், புதிய சாலைகள் அமைத்தல், சாலை களை உயர்த்துதல், புதுப்பித்தல்
4) பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், போக்கு வரத்து தீவுகள், நீரூற்றுக்கள், தெருவிளக்குகள் முதலி யன மேம்படுத்துதல், நிருவாகித்தல்.
2) ‘நமக்கு நாமே’ நிறைவேற்ற, நடைமுறைகள்
கிராமங்களைத் தேர்வு செய்தல், செயலாக்கம், உறுதிப்படுத்தல் ஆகியவற்றை நமக்கு நாமே நிறை வேற்றுதல் நடைமுறைகள் கொண்டுள்ளன.
2.1 நமக்கு நாமே குழுக்கள் அமைப்பு
ஒரே நேரத்தில் நமக்கு நாமே திட்டத்தைக் கூடியவரையில் பல கிராமங்களில் பரப்பிட வேண்டும் என்பதால் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு சிறப்பு ஊக்கமூட்டும் குழுவை அமைத்திட வேண்டும்.
இந்த அணிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் அல்லது அமைப்பாளராக மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது துணை ஆட்சியர் அல்லது உதவித் திட்ட அலுவலர் அல்லது தனி உதவியாளர் தலைமை வகிப்பார். இந்த அணியில் இப்பணிக்குத் தாமாக முன்வரும் இரண்டு அரசு அலு வலர்கள், ஒரு தற்சார்பு முகவர் இருப்பார். எண்ணங் களை வெளிப்படுத்தி இத்தகு பணிக்கு மக்களை ஊக்கப்படுத்துவதுபவர்களாக அணி உறுப்பினர்கள் கண்டறியப்படுவார்கள்.
2.2 கிராமங்கள் தேர்வு
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணிகளை மேற் கொள்ள எக்கிராமத்தவரும் பரிந்துரைக்கலாம். ஊக்க மூட்டும் அணி கிராமங்களை பொதுப் பிரதிநிதிகள், கிராமத் தலைவர் ஆகியோரிடம் சென்று உள்ளூர் மக்களுடன் உரையாடுவர். நமக்கு நாமே திட்டத்தின் கொள்கைகள் உள்ளூர் ஆதாரங்களை ஒன்று திரட்டி அதிகப்பட்சப் பயன்பெறும் முதன்மையை மக்களுக்கு விளக்கிடுவர். பங்குபெற்று மேம்படுத்தும் நடை முறையை தல திட்டமிடுதல், நிறைவேற்றுதல் மேம் படுத்தும் முயற்சிகளை உறுதி செய்வதால் விளையும் பயன்களை விளக்கிட இயலும்.
2.3 திட்டமிடுதல்
திட்டமிடல் நடைமுறையில் ஊக்கமூட்டல், உணர்ந்த தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல், செயல்களில் பட்டியல் தயாரித்தல், செயல்திட்டத்தை மதிப்பிடல் ஆகியவை அடங்கியுள்ளன.
முதல் நடவடிக்கையாக கிராமம் ஒன்றினை கண்டறிந்ததும் சிறப்பு குழு பஞ்சாயத்து தலைவருக்கு கிராமசபை கூட்டங்களை மாலை வேளைகளில் நடத்திட வழிகாட்டும். கூட்டத்தை நடத்துவதில் முதன்மைப் பங்கினைக் கிராமப் பஞ்சாயத்து தலைவர் வகித்திடுவார். பிற தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பிரதிநிதிகள் உரையாடல் நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்குவிக்கலாம். எனினும் அலுவலர்களே முதன்மைப் பங்காற்றுவர்.
நமக்கு நாமே திட்ட மக்களிடமிருந்து பெற்ற கருத்துக்களை கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் விவாதித்து முதன்மையின் அடிப்படையில் நடவடிக் கைகளை முன்னுரிமை செய்வர். நடைபெற்று நமக்குத் தானே கோட்பாட்டு அடிப்படையிலான திட்டங்களை மேற்கொள்ள அவர்களை ஊக்குவிக்கலாம்.
செயல்கள் தொடர்பான உறுதியான பட்டியல்கள், பொதுமக்கள் பங்களிப்பு குறித்த விளக்கங்கள், செயலாக்கக் காலக்கெடு, நிதி நடவடிக்கை ஆகியன குறித்தவற்றுடன் கிராமசபை கூட்டங்களை முடிக்க வேண்டும். பட்டியலானது இறுதி செய்யப் பெற்றதும், நமக்கு நாமே அணி பங்களிப்பினை ஒன்று சேர்ப்பது மதிப்பீடுகள் தயாரிப்பது, தொழில்நுட்ப நிருவாக ஒப்புதல் பெறுவது தகுந்த பொறுப்பாளர்களிடமிருந்து என்பன குறித்தவற்றை ஒருங்கிணைக்கும்.
2.4 செயலாக்கம்
செயலாக்கம் என்பதில் தொழில்நுட்ப நிருவாக ஒப்புதல் பெறுதல், பணிகளைத் தொடங்கி நிறைவேற் றுதல், உண்டிகளுக்கு பணம் வழங்குதல் ஆகியன ஆகும்.
கிராமத்தவர்களே, பொறுப்பு வாய்ந்த ஆட்களுடன் பணிகளை ஒருங்கிணைத்து நிறைவேற்றுபவர்களைக் கொண்டு செயலாக்கக் குழு உருவாக்கலாம். கிராம பஞ்சாயத்துத் தலைவரோ அல்லது கிராமத்தைச் சேர்ந்த பொறுப்பானவர்களோ இதற்குத் தலைமை ஏற்கலாம்.
பிற திட்டங்களைப் போலில்லாமல் தொழில்நுட்ப, நிருவாக அதிகாரம் உள்ளூர் மட்டத்திலேயே உள்ளது.
மாவட்ட ஆட்சியாளரால் மாவட்டத்தினுள் அதி காரப் பொறுப்பின்றி மாவட்டத்திற்குள்ளேயே நிருவாக, தொழில்நுட்ப ஒப்பளிப்புகள் மேற்கொள்ளப் பெறுகின்றன.
நிர்வாக, தொழில்நுட்ப ஒப்புதல்கள் பெற்றதும் உடனடியாக பணிகள் தொடங்கும். உடனடியாக இந்த வழக்கமான நடைமுறைகள் பின்பற்றலாகும்.
செயலாக்க நடைமுறையின்போது கிராமசபைகள் மீண்டும் பணியின் முன்னேற்றம் குறித்தும் பொது மக்களுக்கு விளக்கம் அளித்து விடக்கூடும்.
2,5 உறுதிப்படுத்துதல்
உறுதிப்படுத்தல் என்பதில் பணி நிறைவு, பிற கிராமங்களின் பிற முதன்மை தேவைகளுக்கு நமக்கு நாமே திட்டத்தை விரிவாக்கல், கொண்டு செல்வன ஆகியவை அடங்கும்.
தாங்களே உருவாக்கிய வளங்களுக்கு நிலையான நிருவாகத்திற்கு கிராமத்தவர் பயனாளிகள், குழுவை அமைப்பர், தலத் திட்டமிடல், நிறைவேற்றுதல், பராமரித்தல் ஆகியவற்றினால் மேலும் பல அத்தகுப் பணிகளை மேற்கொள்ள கிராமத்தவர் ஊக்குவிக்கப் பெறுவர் நிறைவேற்றத்தின் பின்னான நிலையிலே மீண்டும் நிலைமையைப் பரிசீலிக்கவும். எதிர்காலத்திற்கு திட்டமிடவும் கிராம சபை கூட்டப் பெறும்.
3. நிதி
1) ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நமக்கு நாமே திட்டக் கோட்பாட்டை பரவிடச் செய்ய அரசு சிறப்பு நிதி அளிக்கும்.
2) நமக்கு நாமே திட்டக் கணக்கு எனும் கணக்கு மாவட்ட ஆட்சியாளர் பெயரில் ஒரு தனி சேமிப்புக் கணக்கு தொடங்கிடப் பெறும்.
இதைப்போலவே செயலாக்க மட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (நகர பஞ்சாயத்துக்கள்) நகராட்சி ஆணையர், துறை அலுவலர் ஆகியவர் பெயர்களில் கணக்கு உருவாக்கப் பெறும்.
3) நிறைவேற்றும் அல்லது மேற்பார்வையிடும் முகவருக்கு நிருவாகம் ஒப்புதல் பெற்ற பின்னர் மாவட்ட ஆட்சியர் நிதி அளிப்பார். மய்யப்படுத்திய அல்லது நமக்கு நாமே திட்டம் விளக்கிய பிற திட்டங்களுக்கு அரசின் இந்த சிறப்பு நிதியை இணைக்கக் கூடாது. நமக்கு நாமே திட்டத்தில் சேர்ந்த வட்டியை மாவட்ட ஆட்சியர்கள் நிதியை கணக்கிடுதல் பணிகளுக்குப் பயன்படுத்தலாம்.
4) நமக்கு நாமே திட்டத்தைப் பரப்பிட இந்த ஒதுக்கீடு தவிர்த்த தல நிதி திரட்டுதல் தவிர்த்து நமக்கு நாமே மாவட்ட நிருவாகம் நிறைவேற்றும் திட்டங்களுக்கு என்ன வகைகள் உண்டு எனக் கண்டறியலாம்.
4) பொது பங்களிப்பு
பொதுமக்கள் பங்களிப்பு குறைந்தது 25 விழுக்காடு அதற்குமேல் பணமாகவோ, பொருளாகவோ அல்லது உழைப்பாகவோ இருந்திட ஊக்கமளிக்க வேண்டும்.
4.1 பணப் பங்களிப்பு
பணம் நன்கொடையினை மாவட்ட ஆட்சியர் காசோலை அல்லது மாவட்ட ஆட்சியர் பயிரின் பெற்று நமக்கு நாமே கணக்கில் வரைவு வைக்கவேண்டும். அத்தகைய கொடைகள் அனைத்திற்கும் பற்றுச்சீட்டு அளித்திட வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் அத்தகு பண வரவு கணக்கு வைத்திடத் தனிப் பதிவேடு இருக்க வேண்டும். திட்ட அலுவலர் அல்லது மாவட்ட ஊர்ப்புற அலுவலர் ஆட்சியர் பொருட்டு கணக்கு வைத்திருக்க வேண்டும்.
4.2 பொருட் கொடை
செங்கல்கள், மணல், கதவு, ஜன்னல்கள், கருவிகள் முதலானவைகளாகவும் கொடை அளிக்கலாம். தல அமைப்புகள் அல்லது துறைகளில் பொருட் கொடை களை நிர்வாக இசைவு பெறும் முன்னர் செலுத்திட வேண்டும். தனி இருப்பு பதிவேடு ஏற்படுத்தி என்ன நோக்கத்திற்கு எதற்கு பயன்பட்டது என்பன கணக்கில் இடம்பெற வேண்டும்.
5. செயல்முறை
1) சமூக ஈடுபாடு எனும் கோட்பாடு, பயன் ஆகியன தனியார் கொடை, அரசு சார்பிலா அமைப்புகள், கொடையாளர்கள், அறநிலையத்தவர், தனி அல்லது பொது நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வணிக அமைப்புகள், பெரு வணிக அமைப்புகள், குடியிருப் போர் சங்கங்கள், அறநிறுவனங்கள், ரோட்டரி, லயன்ஸ் முதலிய தனி அமைப்புகள் ஆகியவற்றிற்கு விரிவு படுத்த வேண்டும்.
2. பணி ஆணைகளை தல அமைப்புகள், வரிசை அமைப்புகள், நன்கொடையாளர், தனியார் நிறுவ னங்கள் அல்லது மேலே குறிப்பிட்ட பிற அமைப்பு களுக்கு வழங்கப் பெறலாம். தனியார் அமைப்புகள், சங்கங்கள் ஆகியவற்றால் பணியை மேற்கொள்ளப் பெறினும், பொதுநிதியைத் தல அமைப்புகள், வரிசைத் துறைகளான மேற்பார்வை முகவர்களாலே வழங்கப் பெறும். அத்தகு நிகழ்வுகளில் அந்தந்த தொழில்நுட்ப பிரிவுகள் தணிக்கை ஆய்வு செய்து உண்டிகள் பிற அரசுத் திட்டங்களுக்கு வழங்குவது போல் வழங்கிட வேண்டும்.
3) 100 விழுக்காடு பொது நன்கொடையில் பயன் பெறும் சங்கங்கள், பயனாளி சங்கங்கள் கொடையாளர் ஆகியோர் அப்பணியைச் செய்ய முன் வந்தால் நமக்கு நாமே திட்டக் கணக்கில் ஏதும் முன்பணம் செலுத்த வேண்டுமென்று வலியுறுத்தாமல் அவர்களிடம் ஒப் படைக்க வேண்டும் என்றும் வழக்கமான தணிக்கை அளவுடன் வடிவமைப்பு மாற்றி, அமைப்பின் தேவை களுக்கு ஏற்றவாறு பணிகளை மேற்கொள்ளலாம்.
6. மதிப்பிடுதலும் கண்காணிப்பும்
1) கிராமசபையினை குறைந்தது மூன்று முறை, திட்டமிடுதல் நிலை, நிறைவேற்றும் நிலை, நிறைவேற்றிய பின் நிலை எனக் கூட்ட வேண்டும். வட்டார அளவில் ஊக்கமூட்டும் குழு ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நாளில் (2 மாதச் சுழற்சியில் 6 கூட்டங்கள்) எனச் சந்திக்கும் முன்னேற்றம், பிரச்சினைகள் குறித்து நமக்கு நாமே குழு பதிவு செய்யும்.
2) கீழ்கண்டவர்களைக் கொண்ட மாவட்ட அளவு மேற்பார்வைக்குழு உருவாக்க வேண்டும்.
1) ஆட்சியர் - தலைவர்
2) திட்ட அலுவலர், மாவட்ட கிராமப்புற வளர்ச்சி அலுவலர், செயலாளர் - உறுப்பினர்
3) எல்லா சட்டமன்ற உறுப்பினர்கள் - உறுப்பினர்
4) எல்லா நாடளுமன்ற உறுப்பினர்கள் - உறுப்பினர்
5) மாவட்டங்களில் பணிகளை நிறைவேற்றும் தலைமை அலுவலர்கள் - உறுப்பினர்கள்
6) மாவட்ட பஞ்சாயத்து தலைவர் - உறுப்பினர்
7) நகர பஞ்சாயத்து உதவி இயக்குநர்
8) நமக்கு நாமே திட்டத்தை நிறைவேற்றும் நகராட்சித் தலைவர் - உறுப்பினர்
9) நமக்கு நாமே திட்டத்தை நிறைவேற்றும் நகராட்சி ஆணையர் - உறுப்பினர்
10) பஞ்சாயத்து ஒன்றிய தலைவர் - உறுப்பினர்கள்
நமக்கு நாமே திட்டத்தை நிறைவேற்றுவதில் பங் கேற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சாரா அமைப்பினர்.
இக்குழு குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூடி பணியில் முன்னேற்றம், அதிக கிராமங்கள் நமக்கு நாமே திட்டத்தை மேற்கொள்ள திட்டம் ஆகிய வற்றை ஆய்வு செய்யும்.
7 தகவல், கல்வி, தொடர்பு
தகவல் கல்வி, தொடர்பு ஆகிய நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கூட மாநில மொழியில், மின் அணு ஊடகம், துண்டு வெளியீடுகள் வாயிலாக, நமக்கு நாமே திட்டம் குறித்து எடுத்துக்கூறி அதன் பயன்களையும் செய்வார்.
8) ஆவணப்படுத்தல், பதிவு
நமக்கு நாமே திட்டம், அது நிறைவேறிய பின் நிலை குறித்து ஆவணப்படுத்தல் இன்றிய மையாதது. திட்டம் நிறைவேற்றிடும் பல்வேறு நிலை களை அதனை மதிப்பீடு செய்ய அதன் தாக்கம் கிராம சமுதாயத்தில் எவ்வளவு என அளவிட ஆவணமாக் குதல் வேண்டும். பணிகளை ஆட்சியர் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்து இயக்கத்திற்கு அதன் வெற்றிக் கதைகளை ஒளிப்படங்கள், பத்திரிகைத் துண்டுகளுடன் அனுப்பி வைப்பர்.
No comments:
Post a Comment