ஜாதி ஒழிப்புப் போராளிகள் நிறைந்த கிராமம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 8, 2022

ஜாதி ஒழிப்புப் போராளிகள் நிறைந்த கிராமம்

 ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கில் (26.11.2021) உரையாற்றிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (‘விடுதலை’ - திருச்சி பதிப்பு: 9.12.2021, பக்கம் 4) அவர்கள்கீழ்க்கல் கண்டார் கோட்டை என்ற ஊர் - அந்த ஊர் எங்கே இருக்கிறது என்று இன்னமும் கூட எனக்குத் தெரியவில்லை. அந்த கிராமத்திலிருந்து ஒரு குழுவாக கைதாகிறார்கள்எனத் தெரிவித்துள்ளார்.

பொன்மலை ரயில்வே குடியிருப்புகளின் கிழக்குப் பகுதியை ஒட்டியிருப்பது மேலக்கல் கண்டார் கோட்டை. இம்மேலக்கல்கண்டார் கோட்டையை அடுத்து சுமார் 3 கி.மீ. தொலைவில் தெற்கே அமைந்திருப்பதே கீழக்கல் கண்டார் கோட்டையாகும். இவ்வூர் தற்போது திருச்சி மாநகராட்சிக்குள் இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் (திருச்சி விமான நிலையத்தின் நேர்கிழக்கே கீழகுறிச்சி உள்ளது இவ்வூருக்கு நேர்வடக்கே 2 கி.மீட்டரில் கீழக்கல் கண்டார் கோட்டை உள்ளது).

1957 நவம்பர் 26 அன்று நடைபெற்ற சட்டஎரிப்புப் போராட்டக்களத்தில் இங்கு 13 போராளிகள் பங்கு எடுத்துக்கொண்டனர். சிறை சென்றனர். பார்ப்பனர் தெருவின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலையின் கீழ் இப் 13 பேர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வூரின் வடக்குத் தெரு பெரியா£ தெரு என்றும், நடுத்தெரு என்பது அம்பேத்கர் தெரு என்றும் மக்கள் ஒப்புதலோடு மாற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றன. மிசா தி.சாக்ரடீசு இந்த ஊரில் பிறந்தவர் ஆவார்.

- தி.அன்பழகன்

அண்ணாநகர், திருச்சி-26

No comments:

Post a Comment