சமா.இளவரசன்
“திருமணம் என்பது மணமக்கள் தாங் களாகவே முடித்துக் கொள்ள வேண்டி ய காரியம். பிற்கால வாழ்க்கையை இரு வரும் சிநேகிதர்களாய் இருந்து அன்புட னும், ஒத்துரிமையுடனும் ஒருவருக்கொரு வர் பழகிக் கூட்டு வாழ்க்கை ஏற்படுத்திக் கொள்ளத் தொடங்கும் இந்தக் காரியம் - மணமக்களுடைய சொந்தக் காரியம் என்பது எங்கள் கொள்கை. இதில் மற்ற வர்களது பிரவேசமே இருக்கக் கூடாது என்பது எங்களுடைய அடுத்த கொள்கை.’’ முக்கால் நூற்றாண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட தந்தை பெரியா ரின் இந்தக் கருத்து இன்று உச்சநீதிமன் றத்தில் வழக்காக நடந்துகொண்டிருக்கிறது.
1954ஆம் ஆண்டின் சிறப்புத் திரு மணச் சட்டத்தின் படி, திருமணம் செய்து கொள்ள விரும்புவோர் தங்களின் விண் ணப்பத்தினை, இருவரில் ஒருவர் வசிக்கும் பகுதிக்குரிய பதிவு அலுவலருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்; அது திருப்திகரமாக இருப்பதாக அவ்வலுவலர் கருதினால், அதன்பின் அத்திருமணத்திற்கான அறிவிப்பினை பதிவு அலுவலகத்திலேயே பொதுமக்கள் பார்வையில்படும்படி (பிரிவு 6(2))வைக்க வேண்டும்; பிரிவு 7(1)இன் படி அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 நாள்களுக்குள் எவரும் அதற்கு மறுப்பு தெரிவிக்கலாம்; 30 நாள்களுக்குள் அந்த அறிவிப்புக்கு மறுப்பு எதுவும் வரா விட்டால், அதன் பின் சிறப்புத் திருமணச் சட்டப் பிரிவு 7(2)இன்படி திருமணம் நடத்திவைக்கப்படும்.
தமிழ்நாட்டில் இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு சுயமரியாதைத் திருமணச் சட்டம் 1967ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட காரணத்தால், திருமணம் செய்துகொள்ள சட்டப்படி உரிமை படைத்த இந்து மதத் தைச் சார்ந்த எவரும் (ஜாதி வேறுபாடின்றி) தங்கள் விருப்பப்படி திருமணத்தை நடத் திக் கொண்டு அதன் பின் பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஜாதிமறுப்புத் திருமணங்கள் பெரிதும் சிக்கல்களின்றி ஏராளமாக நடை பெறுவதற்கு இந்த வாய்ப்பே முதன்மை யான காரணமாகும்.
ஆனால், இருவேறு நம்பிக்கைகள் கொண்ட, இருவேறு மதங்களைச் சார்ந்த இருவர் திருமணம் செய்துகொள்ள விரும் பினால், அவர்கள் சிறப்புத் திருமணச் சட்டம் 1954இன் படியே திருமணம் செய்து கொள்ள இயலும்.
பிற மாநிலங்களில் ஜாதி மறுப்பு, மத மறுப்பு, சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்துக்கும் சிறப்புத் திருமணச் சட்டம் ஒன்றே வழியாகும். அதன் படி, 30 நாள்கள் திருமண அறிவிப்பும், அதற்கு எவரும் மறுப்புச் சொல்ல இருக்கும் வாய்ப் பும் இத்தைகைய திருமணங்களுக்குப் பெரும் தடையாகும். இச் சட்டப்படியும், பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்க வேண் டும் என்ற அவசியம் இல்லையெனினும், பல இடங்களில் பெற்றோர் ஒப்புதல் வலி யுறுத்தப்படுவதும், அரியானாவில் இச்சட் டப்படி திருமணம் செய்ய விரும்புவோர் திருமண அறிவிப்பை பத்திரிகைகளில் விளம்பரமாகக் கொடுக்க வேண்டும் என்பதும், மஹாராட்டிராவில் இணைய தளத்தில் பதிவாளரே இத்தகவலை வெளி யிடும் நடைமுறையும், இத்தகைய திரு மணங்கள் நடந்துவிடக் கூடாது என்று தடுப்பதற்கான முனைப்புகளேயன்றி வேறு என்ன?
1954ஆம் ஆண்டின் சிறப்புத் திரு மணச் சட்டம் கட்டாயப்படுத்தும் 30 நாள்கள் திருமண அறிவிப்பு என்ற நடை முறை, அதற்கு அடுத்த ஆண்டு செய்யப் பட்ட இந்து திருமணச் சட்டத்திலோ, இஸ்லாமியச் சட்டத்திலோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருமணத்தின் மூலம் அடுத்த தலை முறைக்குக் கடத்தப்படும் ஜாதியும், மத மும் இத்தகைய ஜாதி மறுப்பு, மத மறுப்புத் திருமணங்களால் உடைபடுவதைத் தடுப்பதற்காகவே இத்தனை தடைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பெற்றோர் ஒப்புதல் அவசியமில்லை என்பதை பதிவுத் துறை தலைமையகமே தெளிவுபடுத்தியுள்ள தமிழ்நாட்டில் கூட, பல இடங்களில் பெற்றோர் வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் பற்றிய புகார்கள் வருவதும், அதற்கெதிராக திராவிடர் கழகமும், பிற முற்போக்கு அமைப்புகளும் களத்தில் நின்று நடத்திக்காட்டுவதும், சட்டரீதியான வழிகாட்டுதலைப் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் வழங் குவதும் நடப்பாக இருக்கிறது.
இந்நிலையில் சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவுகளால் பாதிக்கப்பட்ட இருவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். சிறப்புத் திருமணச்சட்டத்தின் 6, 7 ஆகிய இரு பிரிவுகளும் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் தனிமைக்கான உரிமையையும், திருமணத்திற்கான உரிமையையும் பறிக்கின்றன; எனவே அப்பிரிவுகளைச் செல்லாது என்று அறிவிக்கக் கோரி அவ் வழக்கில் கோரப்பட்டுள்ளது.
இதே போன்றதொரு வழக்கு, அதே காலகட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி நந்தினி பிரவீன் என்பவரால் உச்சநீதிமன்றத்தில் தொடுக் கப்பட்டுள்ளது. சிறப்புத் திருமணச் சட்டத்தின் 6, 7 ஆகிய பிரிவுகளோடு, 8, 9, 10 ஆகிய பிரிவுகளையும் ரத்து செய் யக்கோரும் இந்த ரிட் மனு தாக்கல் செய் யப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியும், இன்னும் ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
30 நாள்கள் அறிவிப்பு, திருமணத் திற்குத் தொடர்பில்லாத எவர் வேண்டு மானாலும் மறுப்புத் தெரிவித்துத் திரு மணத்தை நிறுத்தலாம் என்ற அடிப்படை அவசியமற்ற நடைமுறை, சட்டத்திற்குப் புறம்பாகக் கோரப்படும் பெற்றோர் ஒப்புதல் போன்றவை தவிர்க்கப்பட்டு, திருமணப் பதிவு எளிமையாக்கப்படும் போது தனி மனித உரிமை நிலைநாட் டப்படும்; சமத்துவத் திற்கான தடைகள் உடைத்தெறியப்படும். சட்டப்படி வயது வந்த இருவர் மனமொப்பிச் செய்து கொள்ளும் திருமணத்தில் மூன்றாமவர் தலையீடு அநாவசியமும், அநாகரிகமும் ஆகும் என்ற சுயமரியாதைச் சிந்த னையை சட்டமும், நீதிமன்றமும் ஏற்கும் காலம் தொலைவில் இல்லை.
No comments:
Post a Comment