தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட் டிப்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த நெடுஞ் சாலைத் துறையில் பணி யாற்றி ஓய்வு பெற்ற நிலையில் பெரியார் பெருந் தொண்டர் கருப்புச்சட்டை அண்ணா மலை அவர்கள் ஜனவரி 23ஆம் தேதி காலை 5 மணி அளவில் 92ஆம் வய தில் மறைவுற்றார். தகவல் அறிந்து மாவட்ட கழக சார்பில் மாநில கலைத் துறை செயலாளர் மாரி. கருணாநி, மண்டல திராவிடர் கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், பாப்பிரெட்டிப்பட்டி நகர அமைப்பாளர் மணி, வழக்குரைஞர் தமிழ்மணி, வேப்பிலைப்பட்டி தீ.இராவணன் ஆகியோர் கலந்து கொண்டு உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத் தினர். மறைந்த அண்ணாமலை கழகம் நடத்திய மாநாடு களில் பொதுக்கூட்ட நிகழ்வுகளில் தவறாது கலந்து கொள் ளக் கூடியவர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் வழங்கப்பட்ட பெரியார் பெருந்தொண்டருக்கான விரு தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment