‘இந்தி’யை முன்னிலைப்படுத்தும் ஆளுநரின் மும்மொழிக் கொள்கை சொற்பிரயோகம் ஏற்புடையதல்ல!
தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
சென்னை, ஜன.28 1967-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்தது முதல் தமிழ்நாட்டில் இருமொழி கொள் கையே அரசின் மொழி கொள் கையாக கடைப்பிடிக்கப்படுகிறது, என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்திட முன்வர வேண்டும் என்ற கருத்து உருவாகும் வகையில், பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களை போல நம்முடைய தமிழ்நாடு பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளை படிக்க வேண்டும் எனவும், பிற இந்திய மொழிகளின் அறிவை நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது சரியல்ல, என குடியரசு நாள் வாழ்த்துச்செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக் கிறார்.
தமிழ்நாட்டின் மொழிப் போராட்ட வரலாற்றை அறிந்தோ ருக்கு பிற இந்திய மொழிகள் என்பது இந்தியை முன்னிலைப் படுத்தும் சொற்பிரயோகம் என் பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.
இரு மொழிக் கொள்கை
தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கத் துக்கு எதிரான மொழிப்போராட் டம் என்பது நெடிய வரலாற்றை உள்ளடக்கியது. தமிழ்நாடு மக்க ளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில்தான் அன்றைய பிரதமர் நேரு, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பாத வரை கட்டாயமாக இந்தியை திணிக்கமாட்டோம் என வாக்குறுதி அளித்தார்.
அதன்பின்னர் தமிழ்நாட்டில் அண்ணா தலைமையில் தி.மு.க. அரசு 1967-ஆம் ஆண்டு அமைந்தபோது தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெறும் இருமொழி கொள்கையே கடைப் பிடிக்கப்படும் என அறிவித்து அன்று முதல் இன்று வரை இரு மொழி கொள்கையே தமிழ்நாடு அரசின் மொழிக்கொள்கையாக கடைபிடிக்கப்பட்டு வருவதை நான் கவர்னரின் மேலான கவனத் துக்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்.
இருமொழி கொள்கையால் தமிழ்நாடு மாணவர்களின் கல்வித் தகுதியிலோ அல்லது பெரும் பொறுப்புகளில், அவர்கள் இடம் பெறும் வகையில் பெறும் வாய்ப்பு களிலோ யாதொரு பின்னடைவோ, குறைகளோ ஏதுமில்லை என்ப தையும் அவர் நன்கறிவார் என்று நம்புகிறேன்.
நீட் தேர்வில் விலக்கு
அதேபோல, நீட் தேர்வின் கார ணமாக அரசு ஒதுக்கீட்டு இடங் களுக்கான எம்.பி.பி.எஸ். தகுதி பட்டியலில் முதல் 1,000 இடங்களில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 579 பேர், மாநில பாடத்திட்ட வாரியத்தில் படித்த 394 பேர் மற்றும் அய்.சி. எஸ்.சி. போன்ற பிற பாடத்திட்டங் களில் படித்த 27 பேர் இடம்பெற்று உள்ளனர்.
இந்த பாகுபாட்டை களையும் வகையில் அரசுப்பள்ளி மாணவர் களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு ஓரளவு உதவக்கூடும். எனினும் அது ஒரு தற்காலிக தீர்வுதான் என்ப தையும், மாநில பாடத்திட்ட வாரி யம் மூலம் படிக்கும் மாணவர்கள் குறிப்பாக அரசுப்பள்ளியில் படித்து தனியார் பயிற்சி பள்ளிகளில் ஏராளமான கட்டணம் செலுத்தி படிக்க இயலாத மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சமூகநீதியின் அடிப்படையில் தங்களுக்கான இடங்களை 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பெறவேண்டும் எனில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு முழுவிலக்கு அளிக்கப்படுவதே நிரந்தமான தீர்வாக அமையும் என் பதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடந்து வலியுறுத்தி வருகிறார்.
ஒப்புதல் தேவை
அதன் அடிப்படையில், தமிழ் நாடு சட்டமன்றத்திலும் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றது.
ஆளுநர், அந்த சட்ட முன்வடி வுக்கு தன்னுடைய இசைவை விரை வில் அளித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதின் மூலம் தமிழ் நாடு மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவு களை நிறைவேற்ற தமிழ்நாடு முதல்-அமைச்சரின் முன்னெடுப்பு களுக்கும், தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கும் துணை நிற்பார் எனவும் நான் நம்புகின் றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment