புதுடில்லி, ஜன. 25- பெரும்பான்மை மக்களை கல்வி கற்பதிலிருந்து அப்புறப்படுத்திடும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியப்பிரதேச மாநில 16ஆவது மாநாடு தீர்மானம் நிறை வேற்றி யுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியப்பிரதேச மாநில 16 ஆவது மாநாடு போபாலில் ஜனவரி 16- முதல் 18ஆம் தேதிகளில் நடைபெற்றது.
மாநாட்டில் நிறைவுரை யாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசுகையில், நம் நாட்டிலும் சரி, உலகத்திலும் சரி கொடுங்கோன்மை மிக்க ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்களில் இறுதி வெற்றி மக்க ளுக்கே கிடைத்திருக்கிறது என்பதை உதாரணங்களுடன் விளக்கி னார். மேலும் கூறுகையில், “உழைக்கும் மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களையெல்லாம் எப்படித் தியாகங்களைச் செய்து, அவற்றி லிருந்து மீண்டு, வெற்றி பெற முடியும் என்பதை அறிந்தி ருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அல்லது இடதுசாரி களின் பலத்தை அளப்பதற்கு நாடாளு மன்றத்தில் அதற்குள்ள பலத்தை வைத்து மட்டும் பார்க்கக்கூடாது. மக்களுக்கும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கும் இடையேயுள்ள உறவுகளை யும் அவர்கள் தங்கள் பிரச்சினைகளை சரிசெய்து கொண்டு எப்படி முன்னேறுகிறார்கள் என்றும் பார்த்திட வேண்டும். சமீபத்தில் நாட்டில் நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் அனைத்திலும் இடதுசாரிகள் முன்னணியில் நின்றார்கள். சமீபத்தில் நடைபெற்ற வரலாறு படைத்திட்ட விவசாயிகள் போராட்டத் திலும், கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த அகில இந்திய வேலை நிறுத்தத் திலும் இடதுசாரிகளின் பங்களிப்பைக் கூறினால் அதுவே இதற்கு விளக்க மாக அமைந்திடப் போதுமானதாகும். இவ்வாறு கூறினார்.
புதிய கல்விக்கொள்கை யானது கல்வியில் வணிக மயத்தை அதிகரிப் பதற் காகவே கொண்டுவரப் பட்டுள்ளது. இது அமல்படுத்தப்பட்டால் பெரும்பான்மையான குடும்பத்தினருக்கு கல்வி மறுக்கப்படும் என்று கூறி, புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
சமூகத் தின் பல்வேறு பிரிவின ரைப் பாதிக்கும் பிரச் சினைகள் மீதும் மாநாட் டில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
No comments:
Post a Comment