முதுநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கட்டணத்துக்கு சரக்கு மற்றும் சேவை வரி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 2, 2022

முதுநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கட்டணத்துக்கு சரக்கு மற்றும் சேவை வரி

சென்னை,ஜன.2- முதுநிலை பொறியியல் படிப்புக்கான கலந் தாய்வு கட்டணத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதித்துள்ள தால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரி களில் எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான் போன்ற முதுநிலை படிப்புகளில் 10,610 இடங்கள் வரை உள்ளன. இந்த படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஆண்டுதோறும் அண்ணா பல்கலை. நடத்தி வருகிறது. இதில் பங்கேற்க கேட் அல்லது டான்செட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்படி, நடப்பு ஆண்டு கலந் தாய்வுக்கான விண்ணப்ப பதிவு இணையவழியில் கடந்தஆக.22 முதல் அக்.11ஆம் தேதி வரை நடைபெற்றது.

மொத்தம் 3,085 பேர் விண்ணப் பித்தனர். அவர்களுக்கான தர வரிசை பட்டியல் நவம்பரில் வெளி யானது.

இதற்கிடையே, வன்னியர் சமூகத்துக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழக்கு காரண மாக கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து கலந்தாய்வுக்கான அட்ட வணையை அண்ணா பல்கலை. தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, சேர்க்கை கலந்தாய்வு ஜன.3 முதல் பிப்.1ஆம் தேதி வரை இணையவழியில் நடக்கிறது.

இதில் பங்கேற்க விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவு மாண வர்கள் ரூ.300, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பிரிவினர் ரூ.150 செலுத்த வேண்டும். அதனுடன் 18 சதவீத ஜிஎஸ்டி கட்ட ணமும் சேர்த்து செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.

இதுதவிர கலந்தாய்வு வைப்புத் தொகையாக பொதுப் பிரிவினர் ரூ.5,000, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பிரிவினர் ரூ.1,000செலுத்த வேண்டும். இந்த கட்டணம், கல்லூரி களில் சேர்க்கையின்போது கழித்துக் கொள்ளப் படும்.

மொத்தம் 10,610 இடங்கள் உள்ள நிலையில், 3,085 பேர்மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர். இதனால் கலந்தாய்வு தொடங்கு வதற்கு முன்னரே 7,525 இடங்கள் காலியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment