கட்டணத்தை உயர்த்திய ‘வோடபோன்’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

கட்டணத்தை உயர்த்திய ‘வோடபோன்’

புதுடில்லி, ஜன. 24- சரிவுக்கு மேல் சரிவை சந்தித்து வருகிறது வோடபோன் அய்டியா நிறுவனம். கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண் டில், இந்நிறுவனத்தின் இழப்பு 7,231 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில், டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், இந்நிறுவனம் 7,231 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. இதற்கு முந் தைய நிதியாண்டின் இதே காலாண்டில், 4,532 கோடி ரூபாய் இழப்பை சந்தித் திருந்தது. செயல்பாட்டு வருவாயும், கிட்டத்தட்ட 10.8 சதவீதம் சரிவைக் கண்டு உள்ளது.

இந்நிறுவனம், தொலைபேசி கட்ட ணத்தை அதிகரித்தது, இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என் கின்றனர், சந்தை நிபுணர்கள். கடந்த நவம்பரில், இந்நிறுவனம் அனைத்து வகையான திட்டங்களுக்குமான கட்ட ணத்தை உயர்த்தி அறிவித்தது.

இதையடுத்து, 2020 டிசம்பர் காலாண்டில், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 26.98 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் 24.72 கோடியாக சரிவைக் கண்டு உள்ளது.இருப்பினும், ‘4ஜிவாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, இக் காலாண்டில் 80 லட்சம் எனும் அள வுக்கு அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அண்மையில், இந்நிறுவனம் அர சுக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவை தொகையான 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பதிலாக, பங்குகளை அரசுக்கு வழங்க முன்வந்தது. ஆனால், அரசு தரப்பில் இத்திட்டம் அடியோடு நிரா கரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment