ஆப்கானிஸ்தானில் பஞ்சத்தால் கடுமையான பாதிப்பு குடும்பத்துக்கு உணவளிக்க பிள்ளைகளை விற்கும் அவலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 5, 2022

ஆப்கானிஸ்தானில் பஞ்சத்தால் கடுமையான பாதிப்பு குடும்பத்துக்கு உணவளிக்க பிள்ளைகளை விற்கும் அவலம்

காபூல், ஜன. 5- ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் 15ஆம்தேதி தலைநகர் காபூலை கைப்பற்றிய தலீபான் பயங்கரவாதிகள் ஒட்டு மொத்த நாடும் தங்கள் வசமான தாக அறிவித்தனர்.

தலீபான்களின் கட்டுப்பாட்டுக் குள் ஆப்கானிஸ்தான் கொண்டு வரப்பட்டதில் இருந்து, அங்கு பொருளாதார சீர்குலைவு ஏற் பட்டுள்ளது. உணவுப் பொருட்க ளின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது.

பொதுமக்களுக்கு கடும் கட் டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பெண்கள் சுதந்திரமாக செயல் படாத நிலை உள்ளது. அவர்க ளுக்கு வழங்கப்பட்டிருந்த பல் வேறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.

அதிலும் குறிப்பாக மேற்கு ஆப்கானிஸ்தான் பகுதி, போர் மற்றும் பஞ்சத்தால் கடுமையான பதிப்புக்கு ஆளாகியுள்ளது.

இந்த நிலையில், அங்குள்ள ஒரு நபர் தனது 10 வயது பெண் குழந் தையை விற்று அதிலிருந்து கிடைத்த பணத்தில் தன் 5 குழந்தைகளையும் குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார் என்ற செய்தி நம்மை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும், இவரை போன்ற பலர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் 40 ஆண்டு களுக்கும் மேலாக நீடித்த உள் நாட்டுப் போரால் அங்கு பொரு ளாதாரம் கடும் சரிவை சந்தித்து உள்ளது. அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல பணியாளர்களுக்கு உரிய ஊதியம் கொடுக்க முடியாத சூழலில் நாடு சிக்கி தவிக்கிறது.

நாட்டில் பாதிக்கு பாதி மக்கள் போதிய உணவு கிடைக்காமல் பசி பட்டினியுடன் வாடி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் செயல் பட்டு வரும், ‘வோர்ல்டு விஷன் உதவி அமைப்பின்தேசிய இயக்கு னர் கூறுகையில்,

"இந்த நாட்டில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரு கிறது, குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.  ஆப்கானிஸ்தானிய குடும்பங்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவளிக்க தங்கள் குழந்தைகளை விற்க தயாராக இருப்பதைக் கண்டு நான் மனம் உடைந்தேன்.

மிக இளம் வயதிலேயே பெண் களுக்கு திருமணங்களை ஏற்பாடு செய்வது இப்பகுதி முழுவதும் அடிக்கடி நடக்கும் நடைமுறை. மணமகனின் குடும்பத்தினர் இந்த திருமண ஒப்பந்தத்துக்கு பின் பணம் கொடுக்கிறார்கள், மேலும், குறைந்தது  15 அல்லது 16 வயது வரை அந்த குழந்தை தனது பெற் றோருடன் தான் இருக்கும்.

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபி மான அடிப்படையில் உதவி மற்றும் நிதி மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது  என்று தனது ஆதங்கத்தையும் அங்குள்ள அவல நிலைவையும் தனது வர்த்தைகள் மூலம் நம் கண்முன்னே கொண்டு வந்தார்.

உலக நாடுகள் ஒன்றிணைந்து ஆப்கனிஸ்தானில் வாழும் குழந் தைகள் மற்றும் பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் ஆதங்க மும் ஆகும்.

No comments:

Post a Comment