ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 29, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து

29.1.2022

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி காவல்துறை ஆணையர் எச்சரிக்கை.

 உ.பி.யில் யோகியால் துவக்கப்பட்ட ஹிந்து யுவ வாகினி அமைப்பு தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினர் போதுமான எண்ணிக்கையை கண்டறிந்து இட ஒதுக்கீடு அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

தி டெலிகிராப்:

பெகாசஸ் எனும் ஒட்டுக் கேட்கும் மென்பொருள், இந்திய அரசிடம் விற்கப்பட்டது என ‘நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான போக்கு வளர்ந்து வருகிறது என மேனாள் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி பேச்சு.

இல்லம் தேடி கல்வி திட்டத்தை தமிழ் நாட்டைப் பின்பற்றி ஜார்க்கண்ட் மாநிலமும் கடைப்பிடிக்க பேராசிரி யர் ஜீன் டிரெட்ஜ் அரசுக்கு வற்புறுத்தல்.

- குடந்தை கருணா 

No comments:

Post a Comment