ரியோ டி ஜெனீரோ, பிப்.25 பிரேசிலில் கடுமையான வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியா னோர் எண்ணிக்கை 204 ஆக உயர் வடைந்து உள்ளது.
தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ மாகா ணத்தில் கடந்த வாரம் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. 30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை வெறும் 3 மணி நேரத்தில் பெய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இப்படி ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கனமழையால் மாகாணத்தில் உள்ள ஆறுகள் உள்ளிட்ட பெரும்பாலான நீர்நிலைகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ள நீரானது, ஊருக்குள் புகுந்ததில், மண்சரிவுகள் ஏற்பட்டு பல வீடுகள் மூழ்கிப் போயின. குறிப்பாக இந்த கனமழையால் அங்குள்ள மலைப்பிரதேசமான பெட்ரோபோலிஸ் பிராந்தியம் கடுமையான பாதிப்புகளான எதிர் கொண்டுள்ளது. தொடர் கனமழை யால் அங்குள்ள பல்வேறு நகரங் களில் வெள்ளம் கரை புரண் டோடுகிறது. இதில் ஆயிரக்கணக் கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் போக்கு வரத்து முற்றிலும் முடங்கி யுள்ளது. மேலும் சாலைகளில் நிறுத்தப்பட் டிருந்த ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட் டன. தொடர்ந்து வெள்ளம், நிலச் சரிவு பாதித்த பகுதிகளில் நூற்றுக் கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இதனை தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் ஜெய்ர் பொல்சனேரோ பேரிடர் பாதித்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அது ஒரு போர் காட்சி போல் உள்ளது என அவர் கூறினார். அடுத்தடுத்து அவசரகால நடவடிக்கைகளை எடுக்கும்படி தன்னுடைய அமைச் சர் களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
பிரேசிலில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 204 ஆக உயர்ந்து உள்ளது. 51 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிளில் மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மண்சரிவு மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயந்திரங்களை பயன்படுத்தி மீட்பு பணி மேற்கொள்வதற்கான முயற்சி கள் தாமதமடைந்து உள்ளன.
இதுபற்றி ரியோ டி ஜெனீரோ மாகாணத்தின் தீயணைப்பு துறை செய்தி தொடர்பு அதிகாரி கூறும் போது, நேற்று புயலால் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.
வரலாற்று சுற்றுலா பகுதியான பெட்ரோபோலிஸ் நகரில் பள்ளிகளில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள 810 பேரை வெளியேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment